பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 253 (2) திருமாலின் வலதுகரத்தில் சக்கரம்: - வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு. - பெரியாழ்வார் திருப்பல்லாண்டு. (3) சிவபிரானுக்கு உபதேசித்த வரலாறு செய்யுள் 52ன் கீழ்க்குறிப்பு சுவாமிமலையில் உபதேசம்செய்தது. சிவனார் தமக்குரிய உபதேச வித்தையருள் திருவேரகத்தில்வருபெருமாளே. குருவெற்பிலுறை சிற்பரமருக்கொரு குருக்களென முத்தர்புகழ் தம்பிரானே திருப்புகழ் 224, 215. சிவபிரான் மாலுக்கு அரியர் - திருப்புகழ் 999, பக்கம் 14 கீழ்க்குறிப்பு. (4) இலஞ்சி-செய்யுள் 13,81-(குறிப்பிற்பார்க்க) (5) தந்திகிரி - பாம்புமலை - திருச்செங்கோடு - செய்யுள் 90 குறிப்பிற்காண்க (6) வலம்-திருவல்லம்-திருப்புகழ்6ெ9தலக்குறிப்பைப் பார்க்க (7) பலதலங்கள் முருகவேளுக்கு உரியனவாய், உகந்தனவாய் இருந்தும் அவர் தணிகையில் இடம் குறித்தார் என்றதனால் தணிகையே முருகவேளுக்குமிக உகந்ததலம் என்பதுபெறப்படுகின்றது. சுந்த ரக்கிரி தொல்புவி தனிற்பல எனினும் - இந்த வெற்பினில் ஆற்றவும் மகிழ்ச்சியுண் டெமக்கே எனப் பெருமானே வள்ளியம்மைக்கு எடுத்துரைத்துள்ளார்; கந்தபுராணம் 6.24.220 o