பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 251 மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசையெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவளே - பட்டினத்தார் - பொது 4. சித்தம தொன்றிச் செய்கழ லுன்னிச் சிவனென்று நித்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே . சம்பந்தர் 1-100-8. ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை. - அப்பர் 4-81-2. (2) அங்கத்தர்-எலும்புமாலையர்-சிவபிரான்-அங்கம் பூனென உடைய அப்பன்-சம்பந்தர் 296-4 (3) கடலின்கண் அரக்கரை அட்டது செய்யுள் 78ன் குறிப்பைப் பார்க்க, (4) திரு.அரங்கத்துமதில் திண்ணார் மதிள் சூழ் திரு அரங்கச் செல்வனார், மச்சின்னி மாட மதிளரங்கா - நாச்சியார் திருமொழி 11-7, 4. (5) திருச்செங்கோடு-வேதகிரி, பாம்புபோன்றது-செய்யுள் 82ன் குறிப்பைப் பார்க்க 91. இடம் குறித்தல் திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் துார்கணதந் திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில் திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே. (ப-உ) திரிரி-சக்ராயுதத்தை வலம் வலது கரத்தில், புரி தரித்த மாற்கு - விஷ்ணுவுக்கு அரியார்க்கு அறிதற்கரிதான பரமசிவனுக்கு உப்தேசம் சொன்ன் ஓங்காரப் பொருளை யுபதேசித்தருளிய திகிரி சுவாமிமலையென்னும் திருவேரகத்தையும், வலம்புரி - சங்கினங்கள், செய் - வயல்களின் கண், ஆர் - நிறைந்திருக்கின்ற இலஞ்சி Hதிருவிலஞ்சிப் பதியையும், செந்தார் - திருச்செந்தூரையும், கன ம்ேகங்கள் தவழாநின்ற, தந்தி - பாம்புபோன்ற, கிரி - திருச்செங்கோட்டுமலையையும், வலம் - திருவலத்தையும், புரிவேறும் மற்றை ஸ்தலங்களையும், படைத்தருள் தனக்குறைவிடமாகக் கொண்டருளிய, சேய் குமாரக் கடவுளது. தணிகையில் -