பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 247 (கு-உ) (1)இதுதோழி'மென்மொழியாற்கூறல்"என்னும் துறை ஒளிருறு வேலவன் தளர்வுறுகின்றமை இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது. (திருக்கோவை 83). (2) வள்ளியின் துவர் இதழ்கண்டுமுருகவேள் உருகிநிற்பது: குறப்பெண். தொன்டைவாய்த் தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன் - முத்துக்குமார பிள்ளைத்தமிழ் - செங்கீரை 5. 88. கண்ணயந்துரைத்தல் செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச் செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர்.பிரான் செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ் செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே. (ப-உ) செயல் - சேற்றிலுண்டாகின்ற, அம் அழகிய, கை - ஒப்பற்ற, வாள் - ஒளிபொருந்திய, - சிரேஷ்டமான, இறை பிரம்மாவின், கோயிலை స தாமரையையும், சிவனார் - பரமசிவனுண்ட, அமுதை விஷத்தையும், செய வெற்றிபொருந்திய, லங்கை - இலங்காபுரியினது, வாளை பிரகாசத்தினழகை முனி = கோபித்த கொண்டல் - மேக நிறத்தையுடைய ரீராமரது. வாளியை பாணத்தையும், தேவர்.பிரான் - தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திர்னது,'செயல் - போர் புரிகின்ற, அங்கை அங்கையிற்பற்றிய, வாளை வாளாயுதத்தையும், முனை - கூர்மை பொருந்திய, வேலை வேலாயுதத்தையும், அன்ன-ஒத்துவிளங்காநின்றன.இச்சேய் உறையும்இக் குமாரக் கடவுளமர்ந்தருளிய, செய் வயலை யுழுகின்ற, அலம் கலப்பையை, கை-கோபித்துமோதி, வாளை வாளை மீன்கள், உகள் புரளுகின்ற (வளர்ப்பத்தையுடைய, செந்தில், திருச்செந்திற்பதியில் வாழ்பவள்-வாழும்பெண்ணினது,சேல்-சேற்கெண்டைபோன்றவி -கண்களிரண்டும்.(எ.று)விழி-எழுவாய்.அன்ன-பயனிலைஏ-ஆசை (க.உ) குமாரக்கடவு ளமர்ந்தருளிய திருச்செந்திற்பதியில் வாழும் பெண்ணினது கண்கள் பிரம்மாவுக்கு உறைவிடமாகிய தாமரையையும், பரமசிவனுண்ட நஞ்சையும், இலங்கையை யழித்த பூரீராமரது பாணத்தையும், இந்திரன் கைவாளையும், (முருகன் கையிலுள்ள) கூர்வேலையும்ஒத்துவிளங்குகின்றன.