பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 245 86. வினையற சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற் சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற் சேறலைத் தாறலைத் தீர்க்குங் குமார திரியவினைச் சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே. (ப-உ சேறு-சேற்றை..அலைத்து-உழக்கி,ஆறு-ஆற்றினின்றும், அலைக்கு அப்பாலெழுந்து - அலைகளுக்கு மேல் எழும்பி, செழும் செழுமை தங்கிய, கமுகில்-கமுகமரத்தில்,சேல் சேற் கெண்டையானது, தலை-அக்கமுகின்றலையிலிருக்கின்றதாறு-குலைகளை,அலைக்கும்அலைக்கா நின்றவளப்பத்தையுடைய, செந்திலாய் - திருச்செந்தினா. யகனே! சிந்தை - என் மனதானது, தி நெறியில் கொடிய மார்க்கத்தில், சேறலை செல்லுதலையும், தாறு அளவுபடாத அலை அஞ்ஞானவிருளையடைதலையும், தீர்க்கும்- நீக்கியருளுகின்ற, குமார குமாரக் கடவுளே! திரிய மாறுபடும்படி, வினை இருவினையாகிய, சேறு-சேற்றின்கண்,அலைத்து-துன்பப்படுத்தி,ஆறலைக்கத்தகுமோ, வழிப்பறிப்போர்போல் என்னுயிரைக் கவரத் தகுமோ, மெய்த்திறம் - உனதருளின் உண்மைத்திறத்தைகண்டும்-கண்டு.அதுவே பற்றாயிருக்க எண்ணுகிற வென்னை நீ-தோன்றா எழுவாய். ஆறலைக்கத் தகுமோ (க-உ) சேல்மீன்கள் சேற்றையுழக்கி யாற்றினின்றும் அலைகளுக்குமேல் எழும்பிக் கமுகின் குலையை யலைக்குஞ் செந்திற்பதியோனே! அடியார்களது அஞ்ஞான இருளை நீக்கியவரை நன்னெறியிற் செலுத்துங் குமாரக்கடவுளே! உன்னருளின் திறத்தைக் கண்டறிந்த என்னை யிருவினைச் சேற்றினுட்படுத்த லாகுமோ? (தவிர்த்தாளவேண்டுமென்றல் குறிப்பு) (1) திருச்செந்துாரில் சேல்மீன்களின் வன்மை - அவை கமுகமரத்தின் மீது பாய்தல், சேல்பட்டழிந்துசெந்தூர் வயற்பொழில்' -கந்தர் அலங்காரம் 40 சேலொடு வாளை வரால்கள் கிளம்பித் தாறுகொள் பூகம ளாவிய இன்பச் சீரலை வாய்நகர் மேவிய கந்தப் பெருமாளே. - திருப்புகழ் 75.