பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 243 (க-உ) ஏக வஸ்துவான பரமசிவனது மைந்தனாகிய வேலாயுதத்தையுடையோனே! திணைப்புனத்தில் வாழ்கின்ற வள்ளிநாயகனே! மயிலேறும் வீரனே! மாவடிவாய்நின்ற சூரனை வென்ற வீரனே! நின் திருவருளின் பிரகாசத்தினால் எனது கோபமென்னும் மிருகம் பொறுமையென்னும் ஆயுதத்தால் அழிந்த தன்மையதாயிற்று. (கு.உ) (1) சிவன் - ஏகன். "ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க - திருவாசகம்-சிவபுராணம் (2) வேலாயுதம் - சிவபிரான் தந்தது; செய்யுள் 57-ன் கீழ்க்குறிப்பைப் பார்க்க (3) தினைவஞ்சி வசம் கரவா மயில்வீரன் - முருகன் வள்ளியை விட்டுப் பிரியாதவர்: "குறவர் பாவையே ஈங்குனை அடைந்தனன், எனக்கு நின்னிரு பூங்கழல் அல்லது புகலொன் றில்லையால்,நீங்கலன் நீங்கலன் நின்னை என்றுமே"-கந்த புரா6.24.84 (4) திருவருள் கூடினபின் பொறை பொறுமைக்குணம் சேர்ந்தது; கோபக்குணம் மாய்ந்தது; முருகா நினதன் பருளால் ஆசா நிகளம் துகளாயின என்றார்.அநுபூதியில் (43). பொறுமையால் கோபம் முதலிய தீக்குணங்கள் நீங்கி நிறையுடைமைநிலைத்திருக்கும். 'நிறையுடைமை நீங்காமை வேண்டில் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். திருக்குறள் 154. இந்தப்பொறையுடைமை திருவருள் கூடிடவருவதாகும். செற்றமும் செருக்கும் காய்ந்தேம். கற்றைவார் சடையான் கோலங் காட்டியாட் கொண்ட அன்றே. - திருவிளையாடல் = வாதவூரடிகள் B3. (5) மான் - மா - மிருகத்தின் பொதுப் பெயர் - விலங்கின் பொது (பிங்கலம்) (6) கரம்-கோபம்-செய்யுள் 58 பார்க்க