பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 229 (ப-உ) திசாமுக - நான்கு திக்கு முகங்களையுடைய, வேதன் - பிரமனும், ஐயன் - அவனது பிதாவாகிய விஷ்ணுவும், பாற்கரன் - சூரியனும், திங்கள் சந்திரனும், தங்கள் தங்கள்தங்கள், அவதி ஆயுசு முடிந்து, சாம் - இறக்கின்ற, உகவேதனையிறிலும் - யுகாந்தத்தில் துன்புறுங் காலத்திலும், ஈறிலர் - அழியார்கள், சீறும் - கோபித்தொலிக்கின்ற,அம்போதி-சமுத்திரத்தின்கண்தோன்றி,சாமுகசாமுகத்தை யுடையவனும், வேதனை - தேவர்கட்குத் துன்பத்தை விளைக்கின்றவனுமாகிய சூரனை வென் கண்ட புறங்காட்டச்செய்த வேலன் - வேலாயுதத்தையுடைய முருகன் வாசஞ் செய்கின்ற, தினைப் புன திணைப்புனங்களையும், தந்தி - யானைகளின், சாமுக - கூட்டங்களையும், வேதனை மூங்கில்களையும், நண்ணு பொருந்தியிருக்கின்ற, தண் - குளிர்ச்சி பொருந்திய, கார் - மேகங்கள் தவழா நின்றவரை பழமுதிர்சோலைமலையை, சேர்பவர்-அடைந்து இடைவிடாமல் தியானிப்பவர். (எ று) சேர்பவர் - எழுவாய், ஈறிலர் பயனிலைஏ-அசை (க-உ) சமுத்திரத்தின்கண் சூரனை வென்ற வேலாயுதப் பெருமான் உறைந்தருளிய சோலைமலையை யடைபவர் பிரமா விஷ்ணு சந்திர சூரியர்கள் எல்லாம் அழியும் யுகாந்தகாலத்தினுந் துன்பமின்றிநித்தியராயிருப்பார்கள். (கு.உ) சேர்தல் - இடைவிடாது நினைத்தல்; "மலர்மிசை யேகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசைநீடு வாழ்வார்" (திருக்குறள்-3) இச்செய்யுள் பழமுதிர்சோலைத் தலத்தின் பெருமையை விளக்குகின்றது. அம்போதி-சாம்-முக-ஏதனை எனப் பிரித்து-ஏதம் செய்தவனாகிய குற்றம் துன்பம் இழைத்தவனாகிய சூரனை எனக் கொள்ளலாம்.சாம்முகம்-அழிதலை அடைதற்கு உற்றமுகம் வேதனை நன்ணு வரை - வே(ய்)தனை வேய் - மூங்கில், பழமுதிர்சோலையில் யானைகளின் கூட்டம் என்பதும், அது - கார்வரை என்பதும், . உவா இனன்குடி கொண்ட தண் கார் வரை' எனவரும் முதற்பாட்டிலும் அதன் குறிப்பிலும்காண்க