பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 முருகவேள் திருமுறை 18-ஆம் திருமுறை எட்டுத் திக்குகளிற் சென்று, நான் மருப்பு - தனது நான்கு கொம்புகளையும், தீட்டு கூர்மையிடுகின்றதும், அ - அந்த படா பட்டமும், வித - சித்திர விதங்களும் பொருந்திய, முகாசலன் - முகத்தையுமுடைய மலைபோன்ற அயிராவதத்தில் ஏறுகின்ற இந்திரனது, சிறை - சிறையை, விட்டவன் - நீக்கியாண்ட குமாரக்கடவுளினுடைய, தாள் திருவடித் தாமரையை, திட்ட அடைய, படா - ஒருகாலும் அழிவில்லாத இவனையே - இப்படிப்பட்ட முருகனையே, நினைவன் - உள்ளத்திலிருத்தித் தியானிப்பேன் (ஆதலால்), திசாமுகனே - பிரமனே. (எ .அறு) சென்னி - எழுவாய், தீட்டப்படா-பயனிலை.ஏஅசை (க-உ) பிரமாவே இனி யென்னை யுதிர நிறைந்த கருக்குழியில் அழுந்துவோரைப்போல் நினையாதே இந்திரனது சிறையைத் தவிர்த்தாண்டகுமாரக்கடவுளது பாததாமரையையடையும் பொருட்டு அவனையே தியானித்துக் கொண்டிருக்கிறே னாதலால் எனது தலை உன் கையால் இனியெழுதப்படாது. (கு.உ) (1) சிறைவிட்டவன் தாள் (தீட்ட) தீண்ட (அடைய) நினைவன்; படா இவனையே நினைவன் - அழிதலில்லாத இந்தப் பெருமானையே நினைவன்;எனக் கூட்டிப்பொருள் காணவேண்டும். (2) இந்தப் பாடல் பங்கேருகனெனை என்னும் கந்தரலங்காரச் செய்யுளின் (89)கருத்தைத் தழுவியது. போளுர்க் குகன்பதம் ஆடுஞ் சென்னிக் கில்லைப் பிரமன் துயருறக் கீறும் எழுத்துக்களே போரி விசாகன் எங்கோன் - கொச்சைச் சிறியனை யிந்நாளும் பண்ணிய கோகனதத் தச்சற்கு இனி.எ(ன்)னைப் பண்ணக் கொடான் இது சத்தியமே. - போரூர் சந்நிதிமுறை அலங்காரம் 41, 26. (கோகனதத்தச்சன்-பிரமன், பத்மத்தச்சன் திருப்புகழ் 451 73. பழமுதிர்சோலையின் பெருமை தி சாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ திசாமுக வேதனை பீறிலு மீறிலர் சிறுமம்போ திசாமுக வேதனை வென்கண்ட வேலன் றிணைப்புனத்தந் திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே.