பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (க-உ) எங்கள் குலதெய்வமான அழகனே! என்னுயிராகிய பெண்ணானவள் செந்திற்பதியான் யான் முறையிடுங் குறையைத் தணிக்கின்றானில்லை, அவன் புயத்தைத் தழுவத் தரவுமில்லை' யென்றும், கூன் பாண்டியன் சுரந்தணித்தவனே என்றும் சொல்லுகிறாள்; சந்திரனையுந் தினந்தோறும் வெறுத்து மயங்குகிறாள்; இனி இப்படிப்பட்ட சனனம் உற்று வருந்தாத வண்ணம் ஆண்டு கொள்ளவேண்டும். (கு-உ) "பாண்டியனது வெப்பத்தைத் தணித்தது-திருப்புகழ் 181, பக்கம் 422கீழ்க்குறிப்பு. விதிகைப்படுதல்-பாடல் 63 பார்க்க 66. வினை பொடிபட சீகர சிந்துர வுத்தவெஞ் ஆர செயபுயவ சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு சகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டி கொண்டே (ப-உ) சீகரம்- அலைகளையுடைய, சிந்து - சமுத்திரத்தின் கண், ரவுத்த - இராவுத்தனான, வெம் - கொடிய, சூர - சூரனை, செய வென்றவனே! புய - உனது திருப்புயத்தை, வசீகர வசீகரித்தலில் வாஞ்சையுள்ள,சிந்துர- திலதத்தையுடைய,வல்லி-வள்ளிநாயகிக்குரிய, சிங்கார - அலங்காரத்தையுடையவனே! சிவசுத பரமசிவனஅது மைந்தனே! சுசி - அக்கினியின து கர - கையிலிருந்தவனே! சிந் துர - வெள்ளை- யானையும், கந்தர - மேகத்தையும், வாகன் - வாகனமாகக்கொண்ட இந்திரனது, சிறை - சிறையை, விடும் - களைந்த சுசிகர பரிசுத்தனே! சிந்து - சிதறஅடி உர-வலிய, மால்-மயக்கத்தைத் தராநின்ற, வினை இருவினையாகிய, குன்றை - கல் மலையை, சிகண்டி கொண்டு - மயில்வாகனருடராய் என்முன் எழுந்தருளி (எறு, நீ தோன்றா எழுவாய்.சிந்து பயனிலை.ஏ-அசை (க-உ) சமுத்திரத்தின்கண் வலிய சூரனை வென்றவனே! அழகிய புயாசலனே! வள்ளி நாயகனே! பரமசிவன் மைந்தனே! அக்கினியின் கையிலிருந்தவனே! இந்திரனது சிறையைக் களைந்த பரிசுத்தனே! நீ மயிலேறி வந்து என்வினையாகியகுன்றைப்பொடிபடுத்தவேண்டும்.