பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 217 என்று துதியாமல் உனது வழியடிமையாகிய யாம் அயலோர் போலப் பழவினையான்மயங்குகின்றதென்ன? (கு.உ) நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும் எள்ளு மெண்ணெயும்போனின்றனந்தையே"திருவாசகம்-திருச்சதகம்46, படைகளுள் முதன்மையானது வேல் : "எண்ணரும் படைகட் கெல்லாம் இறைவ" -கந்தபுரா-45.213 வேல்.வினையை அறுக்கும்-"வினையோடவிடும் கதிர்வேல்"கந்நுபூதி 40. திருப் புகழ் 786,1200 பார்க்க/ھئے 63. பிரமன் கைப்படாதிருக்க தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர் தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத் தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி தியங்காப் பொறியுண்டை பண்டுயப் போர்செய்த சேவகனே. (ப உ) தியங்கா - மயங்காத பொறியுண்டெனும் ஐம்பொறிகளையுடைய,தனு-உடல்,தீதலும்-வேகின்றதும்,மேதியைஎருமைக்கடாவை, ஊர்தி - வாகனமாகவுடைய யமன், அங்கா - (என்னைக்கொண்டுபோய்)வாயைத்திறவென்றும்,பொறியான்செய்த பாவத்திற்காகத் தீயை, உண் - தின்னென்றும், தவமிலியேயென்று நற்றவத்தைச் செய்யாத பாவியேயென்றும்,செப்பலும் சொல்லுதலும், சத்தியம் - உண்மையாதலால், கா இனியாவது காத்தருளும், பொறியுண்டு-பிரமலி.பி யடைந்து, அயன் கைப்படாது - பிரமதேவன் சிருஷ்டிக்குள்ளாகாமற் பிறப்பொழியும்-படி,திர-நிலைபெற்ற,வெற்புகிரவுஞ்சகிரியை, நிதியம் - சங்கநிதி பதுமநிதியும், கா - கற்பகத்தருவும், :* செல்வத்திரளையுமுடைய பொன்னுலகானது, பண்டுபூர்வத்தில், உய பிழைக்கும்படி, போர்செய்த போரினைச் செய்து வென்ற சேவகனே - வீரனே! (எ - று) நீ - தோன்றா எழுவாய். கா. பயனிலை.ஏ-அசை (க.உ) முன் கிரவுஞ்சகிரியைப் பிளந்து தேவலோகத்தைக் காத்த வீரனே ஐம்பொறிகளையுடைய உடல் சாம்பலாவதும், செய்த பாவத்துக்குத் தக்கபடி தீப்பொறியை யூட்டும் யம தண்டனைக்கு நான் உள்ளாவதும் சத்தியம் இனியாவது இவ்வுடற் சுமை கொள்ளாமற் பிறப்பறக்காப்பாற்றவேண்டும்.