பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 215 "ஆடகம், தூயவெள்ளி, அயமெனுங்கோட்டை - திரு அதிகைப் புராணம் திரிபுராதிகா - பூசித்த 38, 'மூன்றிஞ்சி - பொன், அயம், வெள்ளி தன்னாற் பொற்புடனானவன்றே - திருக்கூவப் புராணம் திரிபுர 7. திரிபுரம் எரித்த வரலாறு பாடல் 47 ன் குறிப்பைப் பார்க்க. (2) செப்ப-இட-நடுவுநிலைமையாய் இட்டுண்ண-எனச்சேர்க்க வாணுதல் நோக்கினர்'என்பதற்குச் சிவகாமியை விரும்பினவர். எனவும்பொருள் கூறலாம். 61. வேலின் சிறப்பு திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந் திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ திக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத் திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே (ப-உ) திக்கர் - திக்குப் பாலகர்களும், அச ஆட்டை, திதவன் நிலைபெற்ற வாகனமாகவுடைய அக்கினியும், சென்றுமுன் - முற்காலத்திற் பரமசிவனிடத்திற் போய், திதி குமரர் - திதியின் பிள்ளைகளாகிய அசுரர்கள் செய்த வந்திக்கு கொடுமைக்கு அர சங்கரனே! சத்தி உமையை, இடத்தோப் - இடது பாகத்தில் உடையோனே! என் செய்வது எப்படித் தப்பிப் பிழைப்போம், என - என்று முறையிடுகையில்,தரும்-அப்பரமசிவன் உமக்களித்தருளிய,நீதி - (அடியார் இடரை நீக்கும்) நெறியையுடைய, கர சத்தி - திருக்கரத்தின் வேலாயுதத்தை விதிர்த்திலையேல் - நீ எறிந்து அவ்வசுரர் கிளையை யழிக்காவிடில், எவன் செய்குவர் அத் தேவர்கள் என்ன செய்து பிழைப்பார்கள்,அத்திக்கு-தெய்வயானைக்கு,அரசு-நாயகனே! அத்திசமுத்திரத்தின்கண், அலைவாய் - அலைமோதுகின்ற திருச்செந்திற் பதியில், வளர் வளர்கின்ற, நித்திலக் கொழுந்தே - முத்தின் கொழுந்தொளி யானவனே! (எறு) அவர்கள் - தோன்றா எழுவாய். எவன் செய்குவர்-பயனிலை.ஏ-அசை - (க.உ) தெய்வயானை நாயகனே! திருச்செந்திற்பதியில் வாழும் முத்தொளியானவனே! முன் தேவர்கள் முறையிடக் கேட்டுப் பரமசிவனருளியவேற்படையை நீர் செலுத்தாவிடில் அசுரர்கள் செய்த தீமையைக் கடந்து அவர்கள் பிழைப்பதெப்படி?