பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 211 மாயிருந் திறலும் வரங்களும் சிந்தி மன்னுயிர் உண்பது. எப்படைக்கும் நாயகமாவது, ஒருதனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான் - எனவருமிடத்துக் காண்க - கந்தபுராணம் 1-18-38. 58. பிறவியற சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி சீலங் கனமுற்ற முத்துரர்செந் துார சிகண்டியஞ்சு சீலங் கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சி சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே. (ப-உ) சீலம் - தயாளத்திலும், கன மகத்துவத்திலும், முற்று மேற்பட்ட,அபங்கா-பங்கமில்லாதவனேகர-கோபத்தையுடைய,சலதி -சமுத்திரத்தின்கண்,ரக்க-அசுரக் கூட்டமாகிய,நிசீ-இருளை,லங்கன. கடிந்தவனே! முற்றம் - முன்றிலின்கண், முத்து முத்துகள், ஊர் இறைந்திருக்கின்ற,1செந்தூர-திருச்செந்தூரில் வாழ்பவனே சிகண்டிமயில் வாகனனே! அம் - அழகிய, சுசி - பரிசுத்தமானவனே! லங்கனம் - பசியாகிய அக்கினியினால், உற்ற-பொருந்திய,வேதனை-வருத்தத்தை மேவி அடைந்து, தியங்கினம் - மயங்குகின்றேம், சீேசீ - இது மிகவும் இகழ்ச்சியான, லங்கனம் - பங்கமாம், முற்ற முழுதுமாதலால், இப்பிறப்பூடு - இப்படிப்பட்ட சனனத்திலே, இனி - இனிமேலும், சேர்ப்பது - சேரப்பண்ணுவது, அன்று - நன்றல்ல, (எறு) இக்கவி யிரண்டும், சேர்ப்பது என்னும் ஒரே எழுவாயையும், அன்று என்னும் ஒரே பயனிலையையுங்கொண்டுமுடிந்தன. (க-உ) பங்கம் அற்றவனே! சமுத்திரத்தின்கண் அசுரர்-கிளையை மாய்த்தவனே திருச்செந்தூர் நாயகனே! மயில் வாகனனே! பரிசுத்தமானவனே உதராக்கினிக்கே யிரை தேடி வருந்துகின்ற இகழ்ச்சிக்கிடமான இச்சனனத்தையின்னும் யானடையாதிருக்கும்படி யொழித்தல் நன்று. -- (கு-உ) "தெருவிலேயு நித்தில மெறிஅலைவாய்ச் செந்தில்" திருப்புகழ்63 ஒருகோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் கந்தர் அலங்காரம் 106.