பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை சூழாந் துன்பமற்று வாழும்படி யமராபதியைக் காப்பாற்றென்று பரமசிவன் சொல்லுங்கால் வணங்கியப்படியே முடித்த வேலாயுதனே! அப்பரமசிவனுக்குக்குருவாய் உபதேசித்தவனே! (கு.உ) (1) திருமால் - உலகளந்த வரலாறு - திருப்புகழ் 268, 458, பக்கம் 166, 24 கீழ்க்குறிப்பு ஆகாசத்தையும் கடந்து திருமால தமது திருவடியை நீட்டினது. கேசவன் கால்வீச அண்டகோளகை முகடு சீண்டு வெள்ளருவி பொங்கிப் பொழியும் - மீனாட்சி பிள்ளைத்தமிழ் - பொன்னூசல் 7. பிரமன் - 'நாராயண மாமன் சேய்" - திருப்புகழ் 668 அயனை உந்தியின் மலர்மிசைஅருளியமுகில்-பாசவதைப் பரணி 103 (2) பதவுத்தித்தன் பரவை தீங்குறவே (தீங்கு உற்ற காரணத்தால்) முறையிட மாங்குறை தீத்து என்றாவது, பதவுத்தித்தன் பரவை குறை தீங்கு உறவே முறையிட மா தீத்து - என்றாவது பிரித்தும் பொருள் காணலாம். உரையில் உறவே முழுதும் என இருப்பதால் தீங்கறவே' என்பது சரியான பாடம்போலும் அறவே முழுதும். (3) சென்னியிற் கங்கை சூடிய வரலாறு - செய்யுள் 53ன் கீழ்க்குறிப்பைப் பார்க்க (4) அரனுடைய சூலமும் வெல்ல வல்லதன்றென வேல் கொடு சென்று சூரனை அட்டது வெங்காள கண்டர் கைச்சூலமும். வெல்லா எனக்கருதியே - வேல் விருத்தம் - 2. தீத்தன் பரவு அயில்வேல் - சிவபிரான் புகழ்ந்து அளித்த வேல் எனவும் பொருள்காணலாம். செய்யுள் 61, 84ம் பார்க்க அந்த வேலின் பெருமையை ஏவில் மூதண்டத் தைம்பெரும் பூதமும் அடுவது, ஏய பல்லுயிரும் ஒருதலை முடிப்பது, ஏவர்மேல் விடுக்கினும் அவாதம,