பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (க-உ) திதத்தத் தத்தித்த என்னுந் தாளத்தால் நடிக்கும் பரமசிவனும், பிரமாவும், தயிரையுண்டு பாற்கடலையும் ஆதிசேடனையும் பாயலாகக்கொண்ட திருமாலும் வணங்குகின்ற முதல்வனே! தெய்வயானை தாசனே! சனன மரணத்திற்கு இடமாய் எலும்பு முதலிய தாதுகள் நிறைந்த பொல்லாத இவ்வுடற்பைதியில் வேகுங்கால் உன்னைத்துதிக்கும் என் புத்தியை உனது அடியிணைக்கு ஆட்படுத்தவேண்டும். (கு-உ) த வர்க்கத்தில் அமைந்த அருமைப் பாடல் இது இச்செய்யுளுக்கு உரைகூற முடியாது வில்லிபுத்துாரர் திகைக்க அருணகிரிநாதசுவாமிகளே உரை கூறினர்:நூல் வரலாற்றைப் பார்க்க திருமால் தயிர் உண்டது: "தெதிபட்சன க்ருதபட்சண செகபட்சணன்". திருப்புகழ் 1216 திருப்புகழ் 1022-பக்கம் 72 கீழ்க்குறிப்பு 55. நாம விசேடம் தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந் தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந் தீதோ மரணந் தணபூக ரர்திரண் டேத்தியமுத் தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே. (ப-உ) தீதோதீங்கு மாத்திரமோ, மரணம் - இறப்பும், தவிரும் ஒழியும், பிறப்பு சனனமும், அறும் . நீங்குமாதலால், தீய கொடிய தொழிலை, கல் கற்கின்ற, புந்தி மனமே, தோம் - குற்றத்திற்கு அரண் இடமாகிய, அம்பரமீது சமுத்திரத்திலே, தானவர் - அசுரருடைய, சேனை முற்றும்-சேனையனைத்தையும், தீ-தகித்ததோமர-கைவேலை யுடையோனே னந்தன - கிருபையாளனே! பூசுரர் - வேதியர்கள், திரண்டு கூட்டமாகக்கூடி, ஏத்திய வணங்கத்தக்க முத்து சரவண முத்தையனே ஈது - இந்த ஒம ரண மறையோர் - செய் வேள்வியின் அவிர்ப்பாகத்திற்கு உரியவனே, மலையாளி - குறிஞ்சி நிலத்தை யாள்பவனே என்று உரை - என்று துதிசெய், தென்னுற அழகுபெறும்படியாக (எறு)நீ-தோன்றா எழுவாய். உரை- பயனிலை ஏ-அசை - - (க-உ) தீமையையே கருதுகின்ற புத்தியே! சமுத்திரத்தின்கண் அசுரர் கிளையற மாய்த்த வேலையுடையவனே! வேதியர்கள்