பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 203 படையின் தமிழைச் செவி தாழ்த்துக் கேட்டனர் - முருகவேள் என்கின்றார்சிவப்பிரகாசசுவாமிகள். வள்ளி, கன்னலும் அமுதுந் தேனும் கைக்குமின் தீஞ்சொல் மாற்றித் தன்னிகர் புலவன் கூறுந் தமிழ்செவி தாழ்த்துக் கேளா, அந்நிலை மனங்களிப்புற் றறுமுகம் படைத்த கோமான். சீகாளத்திப் புரா - நக்கீரர் - 116 52. பிறவிக்குக் காரணம் வினைதானோ தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத் தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத் தித்திக்குத் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல் தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் - தீவிலங்கே (ப-உ) தித்திக்கும் தித்தியென்னுந்தாளத்துக்கும்,தொந்திக்கும். தொந்தியென்னுந் தாளத்திற்கு மேற்க, நித்தம் புரியும் - நடன்ஞ் செய்கின்ற, சிவன் - பரமசிவனது செவி பத்தித்திக்கு இருசெவிகளின் புலனிடத்து, உந்து நுழையும்படி, ஓம் - பிரணவப் பொருளை, திக்கற மயக்கநீங்கமொழி உபதேசித்த பாலக பாலகனே தேன் அலைத்து. பலகாரநைவேத்தியத்தால் தேனொழுகி, தித்திக்கும் இனிப்புற்றிருக்கின்ற, தொந்திக்கு வயிற்றையுடைய கணபதிக்கு இளையாய்-இளையோனே விளை-கருப்பையில் உருவான,உயிர்க்கும் - சிவனுக்கும், சிதை அழிந்துபோகின்ற, தோல் தித்திக்கும் - தோற் பையாகிய உடம்புக்கும், தொந்திப்பன ஏது சம்பந்தப்பட்டுப் பிறப்புண்டாவதற்குக் காரணம், செப் - யானமுன்னியற்றிய, வினை - இருவினையினது, தி - கொடிய விலங்கே தளை தானோ? (எ று) நீ என்னும் தோன்றா எழுவாய் சொல் என்னும் பயனிலையைக் குறிப்பாகக்காட்டி நின்றது. (க-உ தித்தித் தொந்தி யென்று நடனஞ்செய்யும் பரமசிவனது திருச்செவியிற் பிரணவப்பொருளை மயக்கற உபதேசித்த ப்ாலகன்ே! தொந்தி விநாயகருக்கு இளையோனே உடலும் உய விருஞ் சம்பந்தப்பட்டுப் பிறவி யுண்டாவதற்கு முன் செய்த வினைப் பாசந்தான் காரணமோ? நீசொல்.