பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை தெய்வயானையினது, செவ்வி-கலவிப் புதுமையினும், நற்கீரர் சொல்நற்கீரர் சொல்லிய திருமுருகாற்றுப்படை, தித்தித்தது (உனக்கு) இனிமையாயிற்று. (எ-று சொல் எழுவாய். தித்தித்தது-பயனிலை ஏ அசிை. (க-உ) மயில் வீரனே! மாவாப் நின்ற சூரனையும், கிரவுஞ்சகிரியையும் மாயையையும் அறச் செற்று அமராபதியை யீடேற்றினவனே! பிரமாவைக் கோபித்தவனே தெய்வயானையின் கலவி இன்பத்தினும் நக்கீரர் துதித்த பாடல், குதிரை முகத்தையுடைய பெண்ணுக்கு அம்முகத்தை மாற்றின உனக்கு,இனிமையாயிற்று. (கு.உ) (1) இச் செய்யுள் திருமுருகாற்றுப்படையின் அருமையை விளக்குகின்றது. (2) குதிரை முகத்தை மாற்றின சரித்திரம்: கலிங்க தேசத்தரசன் மகளாகிய கனகசுந்தரி தாமிர பருணி நதி மூலத்தில் ஸ்நாநஞ் செய்ய வந்தபோது அங்கே தவஞ்செய்து கொண்டிருந்த குதிரை முகமுடைய அயக்கிரீவ முநிவரைக் கண்டு அவமதித்து நகைத்தாள். அதுகண்ட முநிவர் "நீ மறு பிறப்பிற் குதிரை முகத்துடன் பிறக்கக் கடவை" எனக் கனகசுந்தரியைச் சபிக்கஅவளும் மனம் வருந்தி சுவாமி இச்சாபம் என்று தீரும் என வேண்ட, அவர், திருச்செந்தூரில் ஷண்முக நாதன் சந்நிதிக்கு நேராகவுள்ள வதனாரம்ப தீர்த்தம் எனப்படும் சமுத்திரத்தில் ஸ்நாநஞ் செய்யத் தீரும் எனக் கூறினர். மறு பிறப்பிற் கனகசுந்தரி உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய ராஜன் மகளாகப் பிறந்தனள். முக மாத்திரம் குதிரைமுகம் அங்கங்கள் யாவும் வெகு அழகு அது கண்டு மனம் வருந்தின பாண்டியன் தன் மகளுக்கு அங்க சுந்தரி எனப் பெயரிட்டுக் குதிரைமுகம் எங்கனம் தொலையும் என ஏக்கமுற்றிருக்கப், புண்ணிய தீர்த்தங்களில் முழுகவேண்டும் என ஓர் அசரீரி கேட்டது. பாண்டியனும் தன் மகளை அவ்வாறே தீர்த்த ஸ்நாநத் துக்கு அனுப்ப அவளும் கங்கை முதலிய தீர்த்தங்களில் ஆடி, ஈற்றில் திருச்செந்தூரில் சமுத்திர ஸ்நாநஞ் செய்ய, குதிரைமுகம் மாறி சுந்தரமான நன்முகம் பெற்றனள். திருச்செந்துார்ப்புராணம். (3) தேவசேனையின் கலவியின்பத்தினும் அதிக இன்பத்தைத் திருமுருகாற்றுப்படை முருகவேளுக்குத் தந்தது என்கின்றார் அருணகிரியார்; கரும்பின் சுவை, அமுதின்சுவை, தேனின் சுவை இவையெல்லாம் கசப்பு என்று கூறத்தக்க அத்தனை இனிமைகொண்ட வள்ளியின் சுவைமொழியையும் புறக்கணித்துத் திருமுருகாற்றுப்