பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை வெட்சிமாலையையுமுடைய, அம் சிரேஷ்டமாகிய, தாள் - திருவடித் தாமரையில்,சேது சிவந்த அகம் என்னிருதயமானது.ஒன்றும் வகை. கூடும்வண்ணம், பணியாய் அருள்செய்ய வேண்டும், இனி -- இனிமேல், திய கொடிய வினை இருவினையாகிய, சேதகம் சேற்றினுள்ளே, ஒன்றும் அழியாது-ஒருநெறியும் அறியாமல்,உழல்-கிடந்துழலுகின்ற, உயிர் - ஆவியின் வாழ்க்கை, சித்திரம் - பொய்யாயிருக்கின்றது. (எறு) நீ-தோன்றா எழுவாய் பணியாய்-பயனிலை ஏ-அசை (க உ) நான்முகனுந் திருமாலும் அறி யவொண்ணாத பரமசிவனது மைந்தனே இருவினைச்சேற்றில் அழுந்தி வருந்தும் என் உயிர் வாழ்க்கை நித்தியமல்ல, ஆதலால் உன் திருவடியை யென்மனம் பற்றும் வகையருள். (கு உ) (1) பிரமன் ஒருதலை இழந்தது - பாடல் 45ன் குறிப்பைப் | ITт", 5. (2) சிவபிரான் இருவர்க்கும் அரியராய் நின்றது. திருப்புகழ் 999, பக்கம் 14. கீழ்க்குறிப்பு )ே சேதகம் சேறு "பாத தாமரைகள் சேதகத் தலர" பேரூர்ப் புராணம் - பள்ளு32 (4) சிந்திரம்-பொய். 'சித்திரம் இக்கனவில்வா ழ்வு’ - பாடல் -50 50. முத்தியை அருளுக சித்திர மிக்க ணவில்வாழ் வெணத்தெளி யுந்தவவா சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்தி சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே. (ப உ) சித்திரம் பொய்யாகிய, இக் கனவு - இப்போது காணுங் கனாப்போலாகும், இல் வாழ்வு - பாசபந்தங்களாற் சிக்கிய மனைவாழ்க்கையானது, எனத் தெளியும் - என்னும் நிச்சயத்தைக் கொடுக்கின்ற, தவ வாசி-தபோ பலத்தின், திரம் உறுதியை நாடாமல், இக்கன் - கருப்புவில்லையுடைய மன்மதனது, நெறிக்கு காமநூல் வழியில் அழிந்தேற்கு-கெட்டஎனக்கு இனி இனிமேலாவது, செச்சை வெட்சிமாலையைப் புனையும், நல் திவ்வியமான, விசித்திர ஆகனே! மிக்க பெருத்த தன கொங்கையையுடைய குறத்தோகை திறத்த குறவர் வளர்த்த வள்ளிநாயகனே! முத்தி சித்தி மோட்சப்பேறானது, ரமிக்க - குறைதீர்ந்து திருப்தியாகும்படி,