பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 199 புத்தியையும் யுக்தியையும் கூட்ட வல்லது. ஆதலால் இது கோளறு பாடல். “நாளென்செயும்" என்னும் கந்தரலங்காரச் செய்யுளின் (38). கருத்துக்கொண்டது. வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ னுளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு m s மிகவே -என்னுந்தேவாரக் கோளறு பதிகம் போன்றது. (2) உந்தி - கான்யாறு. வள்ளியும் கான்யாறும் - அந்தாதி 7,1689 பார்க்க (3) சந்திரனைப் 'பனிப்பானு' என்பது ஒரு அழகான ப்ரயோகம். சனி - சூரியன் மைந்தன். "சூரியன்தன் தவத்தில் வரு பாலா போற்றி - சனிபகவான் தோத்திரம், "கதிர் சேயே காகம் ஏறும் சனியனே" - நவக்கிரக தோத்திரம், யமனும் சூரியனுடைய பிள்ளை - பாடல் 22 பார்க்க யமனைத் தமையனாகவுடைய சனி - பரிபாடல் 11. உரை சேயவன் - செவ்வாய் (திவாகரம்), செந்திவண்ணன் சேயிவை செவ்வாய் சிறந்த பெயரே (பிங்கலம்), புத்தி - புதன் புத்தி மிதுனம் பொருந்த-பரிபாடல் 11.6"புத்தி, தூதன், பச்சை, புதனே" பிங்கலம். 49. மனம் திருவடியிற் பொருந்த சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார் சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள் சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச் சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே. (ப உ) சேதகமொன்று - ஒருதலை பின்னமான, மன் நிலைபெற்ற ஆதியும் - பிரம்மாவும், தாதையும் அப்பிரமாவின் தாதையாகிய மகாவிஷ்ணுவும், தேடரியார் - தேடுதற்கரிதான பரமசிவனது, சே மைந்தனே தகமொன்றும் - தகுதியாய் முழங்குகின்ற, சதங்கை சதங்கையையும், அம் - அ ழகிய, கிண்கிணி- கிண்கிணியையும், செச்சை