பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை இராவணனையும் வாலியையுஞ் சங்கரித்த திருமான் மருகோனே! மேருவில்லினால் திரிபுர தகனஞ்செய்த பரமசிவனது மைந்தனே! என்று துதிப்பீர்களானால் யுகாந்த காலத்திலும் அழியாமல் நித்தியராயிருப்பீர்கள், (கு உ) முருகவேளைத் துதித்தால் நித்தியராய் இருப்பீர்கள் - என்கின்றார். முடியாப் பிறவிக் கடலிற் புகார்" என்னும் கந்தரலங்காரம் (33),கந்தரந்தாதி (30),திருப்புகழ் 668-குறிப்புக்களைப் Ι ΠΤΙΤΕΒΕ.ΒΕ. வாலியை அட்டது-திருப்புகழ் 231,பக்கம் 78.பார்க்க ராவணனை அட்டது-திருப்புகழ் 452,507 பார்க்க திரிபுரம் எரித்தது-திருப்புகழ் 285, பக்கம் 206 குறிப்பு 48. கோளறு பாடல் சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற் சேயவன் புந்தி கணிசா சராந்தக சேந்தவென்னிற் சேயவன் புந்தி பணிப்பானு வெள்ளியொன் செங்கதிரோன் சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே. (ப உ சேய அழகினையுடைய, அன்பு இச்சையோடு, உந்தி கான்யாற்றின், வன காட்டில், வாச வாஞ்செய்த மாதுடன் - வள்ளிநாயகியுடன், சேர்ந்த கூடியிருந்த செந்தில் திருச்செந்தூரில் வாழாநின்ற, சேய குமாரக்கடவுளே! வன்பு வலிமையில், உந்து - உயர்ந்த இகல் - மாறுபாட்டையுடைய, நிசாசராந்தக அசுரர் குலத்திற்கு இயமனே சேந்த கந்தனே! என்னில் என்று துதிப்பீராகில், சேயவன் - செவ்வாய், புத்தி - புதன், பனிப்பானு சந்திரன், வெள்ளி - சுக்கிரன், பொன் - வியாழம், செங்கதிரோன் - ஆதித்தன், செயவன் - அவ்வாதித்தன் மைந்தன. சனியாகிய நவக்கிரகங்களின் வக்கிரோ தயத்தால், புந்தி தடுமாறவே தரும் புத்தியைச் சலனப்படுத்துகின்ற, சேதம் இன்று - கேடில்லை. (எ று) சேதம் எழுவாய்.இன்று பயனிலை, ஏ-அசை (சு உ) கான்யாறோடும் புனத்திலிருந்த வள்ளிநாயகி பேரில் அன்புகூர்ந்த செந்தில்நாயகனே! அசுரர் குலாந்தகனே சேந்தனே! என்று துதிக்கின்றவர்களுக்கு நவக்கிரகங்களின் வக்கிரோதயத்தா லாகுந் தீமையில்லை. (கு உ) (1) இப்பாடல் அவசியம் மனப்பாடஞ் செய்ய வேண்டிய அருமைகொண்டது. நவக்ரகதோஷத்தை நீக்க வல்லது நல்ல