பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 189 (கு உ) ஈதலின் விசேடத்தை நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்".-(கந் அலங்.18) என்ற இடத்துங் காண்க (1) கந்தரி சிந்துரை பாக "பகர்தரு குறமகள் தருவமை வனிதையும் இருபுடையுறவருபெருமாளே"திருப்புகழ் 270 (2) உனதடிசேம நட்பு: "உற்றார் இலாதார்க் குறுதுணை யாவன " அற்றார்க் கரும்பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே” பற்றற்றார் பற்றும் பவள அடி, மணி அடி, பொன்னடி, மாண்பாம் அடி, மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல அடி அப்பர் 4-92-13; 6-6-9. 40. காம மிக்க கழிபடர் கிளவி சேமர விக்கம் படையாக வீசுய தேசமுன்னூற் சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச் சேமர விக்கந் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல் சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே. (ப உ) சேம - சிவந்த ரவிக்கு - சூரியனுக்கு அம் - சலத்தை படையாக - அசுரரது தடையை விலக்கும் ஆயுதமாக விசு - இறைக்கின்ற, உபதேசம் - உபதேசத்தையும், முன்னுால் முப்புரி நூலையும், சேமர் - காப்போராகிய வேதியர் செலுத்தும், அவிக்கு அவிர்ப் பாகத்திற்கு அம் - அழகிய, பலம் - நற்பயனை, தருவாய் அளிப்போனே செருவாய போரினையுடைய, வெஞ்சூர் - கொடிய சூரனாகிய, சே - வயிரம் பொருந்திய, மா - மாமரத்தினால், விக்கம் தேவர்கட்குண்டான விக்கினத்தை திரித்தாய் ஒழித்தவனே வருத்தியஎன்னைத் துன்பப்படுத்துகின்ற, அன்றில் - காமசின்னமாகிய அன்றிற் பட்சியும், தென்றல் - அவனது தேராகிய தென்றலும், சே - கழுத்தின் மணியொலியைச் செய்தலினால் இடபமும், மரவிக்கு கருப்பு வில்லும், அம்புய வாளி - தாமரைப் பூவாகிய அம்பும், விண்டு ஆர்ப்பரித்து, இரை முழங்குகின்ற, தெண்டிரை - தெளிந்த திரையையுடைய கடலும் (ஆகிய இவ்வாறும்) (எ று) அன்றில் முதலிய ஆறும் எழுவாய்;வருத்திய-பயனிலை,ஏ-அசை (க உ) ஆதித்தனுக்கு அம்பாகச் சந்தியாவந்தனஞ் செய்யு முந்நூலாளராகி மறையவரது வேள்விக்குத் தக்க பலனளிப்போனே!