பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 36. திருவடியை அணுக அருள் செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச் செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளனுகச் செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே. (ப உ) செச்சைய - வெட்சிமாலையை யுடையோனே! வாவு - தாவுதலையும்,இகல்-பகையையும்,அயில்-கூர்மையையும் பொருந்திய, வல்-வலிய, வாயிடை வாயினிடத்தில், சேடன் - பாம்பு நிற்க-இருக்க செ - சிவந்த சைய மலையின்கண், ஆவி அதனுயிரை பருகும் உண்ணுகின்ற, சிகாவல - மயில்வாகனனே செம் சிவந்த கை கரத்தினிலேந்தி, வெம் - வெவ்விய தீ அனற் பொறியை, செச்சைய ஆட்டு வாகனத்தையுடைய அக்கினி தேவனே! வாவி - சரவணப் பொய்கையில், விடுக எனும் (பரமசிவன்) கொண்டுபோய் விடுகென அதில் உற்பவித்த செல்வ - பாலகனே! நின் தாள் - உன்னுடைய திருவடிகளை அணுகச் செ நாங்களடையக் கிருபை செய்: சை இகழ்தற்கிடமான, அவாவின் - ஐம்புல ஆசையால், உயிர் வாழ்வு உயிரோடு வாழ்வதை இனி அலம் - இனியுடையேமல்லேம், சீர்ப்பினும்-செல்வம் அதிகரிக்கினும், (எ-று) நீ-தோன்றா எழுவாய், அணுகச்செ-பயனிலை ஏ-அசை (க உ) வெட்சிமாலை யுடையவனே! பாம்பினுயிரை யுண்ணு மயில்வாகனனே பரமசிவனிடத்தில் அனற்பொறியாய்த் தோன்றி அக்கினி தேவனாற் சரவணப்பொய்கையில் விடப்பட்டதில் வளர்ந்த பாலகனே இனி நாங்கள் மிகுந்த செல்வம் அடையினும், அவ்வாசையில் அழுந்தி உடலை யோம்போம்; நின் திருவடியிற் சேர்த்துக்கொள். (கு உ) (1) மயிலின் வாயில் பாம்பு. செங்கண்வரி போகி (பாம்பு) கொண்டபடம் வீசு மணிகூர்வாய் கொண்டமயில் திருப்புகழ் 62 பாம்பு உணவு, காகோதாசன.தோகை'திருப்புகழ் 1000 t (2) தீப் பொறிகளை அக்னி சரவணத்திற் சேர்த்தது. "தீக் கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்ப" . கந்தர் கலிவெண்பா, "அக்நிகர மீதிற் ப்ரபாகரனும்"-வேடிச்சி வகுப்பு.