பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 181 33. செந்துரைக் கருதுக சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற் சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே சேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே (ப. உ. சே.அழகிய, தனம் தந்து திருமுலைப் பாலூட்டி உறு. பெரும்பேறாயுற்ற, ஐ என்று ஐயனேயென்று, உமை செப்பும் பார்வதி யருமையாய் மொழியும்,குருந்து- பாலகனாகிய குமாரக்கடவுள்,உறைஅமர்ந்தருளிய, காற்சேது - சிவந்த காலையுடைய, அனம் அன்னங்களும்,தந்துறை-நூலோடு கூடிய,அல்லிஆம்பல்களும்,மன் - அகலாதிருக்கின்ற, வாவி தடாகங்கள் சூழ்ந்த செந்தூர் == திருச்செந்திற்பதியை, கருது நீ சிந்தைசெய், அசேதனம் - அறிவின்மையான, தம் - தங்கள் தங்கள், துறை என்று - சமயக்கோட்பாடென்று அறியார் திறம் நீங்கி தெளியாமலுழலும் பரசமயவாதிகள் கூட்டத்தை நீங்கி, நெஞ்சே - மனதே. சேது சேது முதலிய, அனந்தம் துறை மற்றும் மற்றநேக கடல் நதிகளையும், உற்றாடித் திரிகை விட்டுபோய்ப் போய்த் தானஞ்செய்தலைவதை விடுத்து (எறு)நீதோன்றா எழுவாய்.கருது-பயனிலை ஏ-அசை (க உ) நெஞ்சமே பரசமயவாதிகளோடு இணங்காமல் சேது முதலிய தீர்த்தங்க ளாடக் கருதும் மனதைவிட்டுப் பார்வதி திருமுலைப் பாலுண்ட குமாரக்கடவுள் வாசஞ் செய்கின்ற திருச்செந்தூரையே நாடுக (கு.உ)"பாவை திருமுலைப்பால் அருந்தி-விம்மியழுங் குருந்து" கந் அலங் - 5. மரகதவல்லி கையால் மார்பில் அணைத்து அமுதந்தர வுண்டுமகிழ்ந்து-திருவிரிஞ்சை பிள்ளைத் தமிழ்-தால-3 "செந்திலென்றவிழவுளம்"-திருப்புகழ் 18 "செந்திலையுணர்ந்துணர்ந்துணர்வுற"-திருப்புகழ் 47 "திருச்செந்திலையுரைத்துய்ந்திட"-திருப்புகழ் 71. 34. உள்ளம் திருந்த திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத் திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத் திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால் திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே.