பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 179 (கு உ) "முடியாப் பிறவிக் கடலிற் புகார்-வேற் பெருமாள்-திருநாமம் புகல்பவரே"-கந்அலங்-33 'மாமயிலோன்-கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே-கந்தர் அலங்காரம் -40 கந்தன்' என்னும் நாம மந்திரத்தின் சிறப்பை "ஓம் நமோ கந்த" என்றுரையாதே ஊசலாடும் புலன்? - திருப்புகழ் 1107, பக்கம் 232 கீழ்க்குறிப்பிற் பார்க்க 31. அன்பு தா என வேண்டிக் கொள்ளுங்கள் தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந் தீதா வசவ ணியாயஞ்செய் வேதிய ரேதியங்காத் தீதா வசவ ணிமலர்செல் வாசாக் கிரவசத்த தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே. (ப உ) தீதா - பொல்லாங்காகிய, வசவு இகழ்ச்சிச் சொல்லை, அனுபவிக்க அனுபவித்தற்கிடமாய், மண்ணிலும் பூலோகத்திலும், விண்ணிலும் - தேவலோகத்திலும், (புகழையும் போகத்தையும் பெற நினைத்து), செந்தி - சிவந்த அக்கினி பகவான், தாவு - ஏறுகின்ற, அச - ஆட்டை அணியாயம் செய் - சீவகாருணியம் இல்லாமல் வதைத்து யாகஞ் செய்கின்ற, வேதியரே - மறையோரே தியங்கா - இனியப்படித் திகைக்காத தீ - நல்லறிவை, தா தந்தருள்வாயென்றும், வசவ இடப வாகனத்தையுடைய, நிமலர் - பரமசிவனது, செல்வா மைந்தனே! சாக்கிர வசத்து - ஆன்மா சாக்கிர அவத்தையிலறி. வோடிருக்கிற காலத்திலும், அதீதா - துரியாதீத அவத்தையிற் கருவி கரணங்களொடுங்கி, வச-வசமாகுங் காலத்திலும், அன்புறப்பாரெனும் - உனக்கு எங்களிடத்தில் அன்புண்டாக்கிக் கடாகூதிக்க வேண்டும் என்றுந் துதியுங்கள், முத்தி - மோகூதுமானது. சித்திக்க - உங்களுக்குக் கிடைக்கும்படி (எறு) நீங்கள் தோன்றா எழுவாய். துதியுங்கள் பயனிலை ஏ-அசை (க உ) இம்மையிற் புகழையும், மறுமையிற் போகத்தையும் பெற நினைத்துப் பழிக்கஞ்சாமல் சீவனைக் கொன்று வேள்வி செய்கின்ற மறையோரே முத்தி வேண்டுமானால் பரமசிவனது மைந்தனே! சாக்கிர அவத்தையிலும் துரியா தீதத்திலும் எங்களுக்கு நல்லறிவுண்டாக அன்பு வைத்தருளென்று துதியுங்கள்.