பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (4) சம்பந்தர் தாம் அருளிய பதிகம் ஒவ்வொன்றிலும் அப்பதிகத்தை ஒதினவர் அடையும் பயனை எடுத்துக் கூறியுள்ளார் திருக்கடைக்காப்பில் (ஆதலினால் 'சொற்படி செய்ய ஒதி" என்றார். (5) திருநீற்றின் பெருமையைப் போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பதுநீறு என்றும் பிறவகையிலும் எடுத்து ஒதும் மந்திரமாவது நீறு என்னும் திருப்பதிகத்தைக் காண்க (சம்பந்தர் 266) (6) சமணர் கழுவி லேற்றப்பட்டது - திருப்புகழ் 181, பக்கம் 422 கீழ்க்குறிப்பு 30. நாம விசேடம் தெய்வ மணம்புனர் தீகால் வெளிசெய்த தேவரைந்த தெய்வ மணம்புன ராரிக்கு மருக செச்சையந்தார் தெய்வ மணம்புன ருங்குழ லாளைத் திணைப்புணத்தே தெய்வ மணம்புணர் கந்தனென் னிருங்க டீதறவே. (ப - உ) தெய்வ - தேவர்களையும், மன்ை - பூமியையும், அம்பு சலத்தையும், உணர் - அறிவையும், தீ-நெருப்பையும், கால் காற்றையும், வெளி - ஆகாசத்தையும், செய்த படைத்த தே பிரமாவானவன், வரைந்தது - பொறித்த லிபியை எய்வகுமாரக் கடவுளினது 1நாமகீர்த்தனமானது) செயிக்குமாதலால், மண் மாசற்ற, அம்- அழகிய, புள் - கருடவாகனத்தையுடைய, நராரிக்கு நரசிங்க அவதாரமெடுத்த திருமாற்கு மருக - மருகோனே! செச்சை அம்தார் - அழகிய வெட்சி மாலையை யணிந்த தெய்வ - கடவுளே! மணம் புணரும் - வாசனையை யணிந்த குழலாளை கூந்தலையுடைய (வள்ளி) நாயகியை, தினைப்புனத்தே தினைப்புனத்திலே, தெய்வ மணம் புணர் காந்தருவ மணமாகப் புணர்ந்த கந்தன் - குமாரக்கடவுளே! என்னிர் என்று தோத்திரம் பண்ணுங்கள், உங்கள் உங்களுடைய, தீது வினை, அற ஒழியும்படி, (எறு நீர் - தோன்றா எழுவாய் என்னிர் பயனிலை ஏ அசை. (க - உ) திருமான் மருகோனே! வெட்சி மாலையை யணிந்தோனே! வள்ளிநாயகியைத் தினைப்புனத்தின் மணந்த கந்தசுவாமியே! என்று துதித்தால் அது பஞ்சபூத முதலானவற்றைப் படைத்த பிரமாவின் விதியையு நீக்குமாதலால் உங்கள் தீவினையறும் பொருட்டு அப்படித் துதியுங்கள்.