பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை பரணமுந் தாழா தெடுத்துச் சுருட்டி இரு பங்கயக கைகள கடடிப, * பரிவர்த்தனைக் கால மாமென்ன, மான்மழுப் பக்கத்தில் அங்க மூன்றாம் கிரண வெண் பிறையும், கடுக்கையும் முழங்குபா கீரதியும் வீழ்வ தென்னக் கிளர்தலை குனிந்து, ஐந்து வாயும் புதைத்த, மா கேசன் திருச்செவிக்குள் திரணமென அமுதெழும் ப்ரணவத்தின் உரைசொன்ன திருவாயின் முத்தமருளே செங்கண்மால் மருகனே குன்றைவாழ் முருகனே திருவாயின் முத்தமருளே. -(மயூரகிரிநாதர் பிள்ளைத் தமிழ்) 20. இறைவன் உள்ளத்திருக்க செயதுங்க பத்திரி போற்றும் பகிர திகரசெவ்வேற் செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ் செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற் செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே. (ப உ) செய சிறந்த, துங்கபத்திரி போற்றும் - துங்க பத்திரியென்னும் நதி வணங்குகின்ற, பகிரதி கர கங்காதேவியின் கையிலிருப்பவனே செவ்வேல் - சிவந்த வேலாயுதத்தையுடைய, செயசெயம் பொருந்திய குமாரக் கடவுளே! துங்கபத்திரி சுரப்புணனை யிலையை, குடும் புனைகின்ற, குறத்தி திறத்த வள்ளி பங்காளனே! தண்டம்-தண்டாயுதமும்,செய-வெற்றியும், துங்க-பெருமையும், பத்திஒழுக்கமுமுடைய, ரிபு மாறுபட்ட (காலன்), திரி கெடும்படி (உதைத்த) பாதத்தர் - திருவடியையுடைய பரமசிவன், செல்வ புதல்வனே தென்பால் - தென் திசையில், செய் - போகச்செய்வதாகிய, அதுங்கு - யாவருமொதுங்கும், அபத்து-தி நெறியினால், இரிய எனது சிந்தை முறிந்தோட, திரியாது - உழலாமல், இரு நீ தங்கியருள வேண்டும் என் சிந்தையில் - என் மனத்தின்கண்ணே. (எ று) நீ தோன்றா எழுவாய்.இரு-பயனிலை (க உ) காங்கேயனே! வேலாயுதனே! வள்ளிநாயகனே! பரமசிவனது மைந்தனே யான் இயம தண்டனையை விளைக்கும் அவநெறியிற்சிக்காவண்ணம் நீ என் சிந்தையில் வீற்றிருக்கவேண்டும்.