பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தாந்தாதி 163 (கு உ) (1) சே-இடபம் சேவன் இடபவாகனத்தன் - சிவன்; சேவ தேறிய செல்வன்-சம்பந்தர் 3.5-7; (2) சூரியன் பல் - தக்கயாகத்தில் உதிர்க்கப்பட்டது - திருப்புகழ் 390-பக்கம் 486-487 குறி ப்பு. சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை விாரி தெரிந்தவா றுந்தீபற - திருவாசகம் திருவுந்தியார். (3) வள்ளி - உந்தி வனவாச மாது; பாட்டு 7 குறிப்பைப் பார்க்கவும். 17. இறைவன் ஆட்கொள்ளுந் திறம் சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச் சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர் சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள் சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றிணைவிளைவே. (ப உ) சேர் - இசைந்த, இக்கு - கரும்பையும், வடு மாவடுவையும் (ஒத்த), மொழி விழியாள் - மொழியையும் விழியையுமுடைய வள்ளிநாயகியின், தனச்செல்வி-கொங்கையின் தன்மை, குறச்சேரிக்குகுறவர்குடியிருப்புக்கு வடு (காந்தருவமணம் நடந்ததென்னும்) குற்றமாகிய சொல்லை, விளைந்தது உண்டாக்கினது, அன்றே - அக்காலத்திற்றானே, நன்று நன்றாயிருந்தது, தெண்டிரை நீர் கடலனைத்தும், சேரி - ஒருமித் து, கு உலகத்தை அடு - அழிக்கின்ற, கடைநாளிலும் உகாந்த காலத்திலும், சிதைவற்ற அழிவில்லாத செவ்வேள் - குமாரக் கடவுளது, சேரி - (தென்சேரி வட) சேரியாகிய, குவடு மலையின், புடை - பக்கத்தில், சூழ் - சூழ்ந்த புனத்தில் தினைப்புனத்தில், தினை -தினை, விளைவு விளைவானது, (எ-று) வடு, விளைவு-எழுவாய், விளைந்தது.நன்று-பயனிலை ஏ-அசை (க உ) குமாரக் கடவுள் ஆளுகைக்குள்ளடங்கிய மலைப் பக்கத்தில் தினை நன்றாய் விளைந்தது; உடனே கன்னல்போல் மொழியும் மாவடுப்போல் விழியுமுடைய வள்ளிநாயகியின் யெளவனத்தால் குறவர் குடிக்கு வடுவிளைந்தது. (கு உ) பெரும்பபைம்புனத்திற் சிற்றேனல் காத்த வள்ளியின் கொங்கையை விரும்பின குமரவேள் வள்ளியைக் களவு கொண்டதால் குறச்சேரிக்கு வடு விளைந்தது. 6