பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை பாரதம்-குருகுல-11 கன்னபூரமும் காது மள்ளியே'-தக்கயாக 504 (4) 'சிவபிரான் அந்தியன் னதொர் மேனியான் சம்பந்தர் 251.11 (5) சிவனுக்கு முருகவேள் உபதேசித்தது - திருப்புகழ் 327, பக்கம் - 314 குறிப்பு பாடல் 628 பக்கம் 462 குறிப்பு (6) சேவல் காப்பாற்றுதல் - இறடியஞ் சேவற்கு எறிகவண் கூட்டியும் (இறடி - தினை, சேவல் - காவல்)-கல்லாடம் 87. சேவற் காட்டினில்-திருப்புகழ் 557, பக்கம் 272, (7) வேல் கொடு......வா என்றார் - வேல் கூற்றுவன் கொடுமையை விலக்கும் ஆதலின் (அந்தாதி.100) 16. பிரிவாற்றாமை சேவற் கொடியும் பணிசாந் தகனுந் திருக்கரத்துச் சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புணத்துச் சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச் சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே. (ப உ) சேவற்கு இடப வாகனத்தையுடைய பரமசிவனால், ஒடியும் பல் - பல்லுதிர்க்கப்பட்ட, நிசாந்தகனும் இருட் கூற்றாகிய ஆதித்தனும், திருக்கரத்து (உனது) அழகிய கையினிடத்திலிருக்கின்ற, சேவற்கொடியும் கொடியாகிய சேவலும், கொடிய கண்டாய் - பொல்லாதவைகளாயிருக்கின்றன; தினை சூழ் புனத்து - தினை நிறைந்த புனத்தை சேவல் - காப்பவளும், கொடி - நீண்ட, உந்தி கான்யாற்றின், வளத்தவளும் வளப்பத்தையுடையவளுமாகிய (வள்ளியம்மையையும்), தந்தி அயிராவதம் வளர்த்த களப - சந்தனம் அணிந்த சே - சிவந்த வல் - சொக்கட்டான் காய்போன்ற கொங்கையையும், கொடியும் - கொடிபோன்ற இடையையுமுடைய (தெய்வயானையையும்), உடையாய் இருபாகத்தும் வைத்திருக்கின்ற கந்த ஸ்வாமியே, பிரியினும் - உன்னைப் பிரிந்த (பகல்) காலத்தும், சேரினும் - உன்னையடைந்த (இராக்) காலத்தும் (எறு) நிசாந்தகனும் சேவற்கொடியும் எழுவாய்.கொடிய பயனிலை ஏ-அசை (க உ) வள்ளிநாயகியையுந் தெய்வானைநாயகியையுமுடைய கந்தனே உன்னைத் தழுவிய காலத்திரவு நீடியாமல் கோழி கூவியும், உன்னைப் பிரிந்தகாலத்து மாலை விரைந்து வராமல் பகல் நீடித்தும் கொடுமைசெய்வனவாயிருக்கின்றன.