பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 161 15. உயிரை யமன் கொள்ளை கொள்ளாத வழி திவாகர கன்ன கொடைப்பாரி யென்று ழ ரீனவல்லீர் திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந் திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந் திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே (ப-உ) திவா-பகலிலே, கரகன்ன கன்னனைப்போற் கொடுக்குங் கரத்தோனே! கொடைப்பாரி - பாரி வள்ளலைப் போற் கொடுக்குங் கொடையோனே என்று - (புல்லரிடஞ் சென்று) சொல்லி, உழல் - வருந்தச்செய்யும், தீன வறுமையாகிய, அல் - இருளை ஈர். நீக்கும், திவாகர ஞான சூரியனே! கன்னபுரக் குழை = கன்னபுரக் குழையென்னும் பணியணிந்த வல்லி - வள்ளிநாயகி, செருக்கு - களிப்புறத் தழுவும், உர - மார்பையுடையோனே அந்தி - மாலையின் செவ்வானம் போலும், வாகு - அழகையுடைய, அர - பரமசிவனது, கன்ன - திருச்செவிக்கு சுக வாசக - இனிய வசனம் உபதேசித்தவன்ே! திறல் - வலிமையையுடைய, வேல் கொடு - வேலாயுதத்தைக் கொண்டு, என் - எனது, புந்தி - இருதயத்தில், வா - வரக் கடவாய்; கர - ஒளித்து நின்று, கன்ன மறலியிடாது - இயமனானவன் கொள்ள்ை கொள்ளாமல், உயிர் - என்னுயிரை, சேவலுக்கு o (அவ்வுயிரைக்) காப்பாற்றும் பொருட்டாக, (எறு) நீ - தோன்றா எழுவாய் வா பயனிலை ஏ-அசை (க உ) வறுமையினால், பிறரிடத்துக் கொடையிற் கன்னனே! பாரி வள்ளலே யென்று புகழ்ந்து இரப்பதை யொழிக்கும் ஞான சூரியனே வள்ளிநாயகி தழுவு மார்பனே! பரமசிவனுக்கு உபதேசித்தவனே! என்னுயிரை யமன் கைப்பற்றிக் கொள்ளாதபடி யென்னை வந்து காத்தருள். (கு - உ) (1) பாரி, கர்ணன் - 'கொடுக்கி லாதானைப் பாரியே என் Ј)/ கூறினுங் கொடுப்பாரிலை" - சுந்தரர் 734.2 வண்புகழ் பாரி; "முதிய க(ர்)னனென"- திருப் புகழ் 236,304 கர்ணன் பகலிலே கொடுப்பது - திருப்புகழ் 577 பக்கம் 318 கீழ்க்குறிப்பு: பாரி - திருப்புக ழ் - 123, பக்கம் 290; பாடல் 236, பக்கம் 90 கீழ்க்குறிப்புக்கள். (2) வறுமையை இறைவன் o: - "மிடிது.ாள்பட, கனல் மால்வரை சேர் பெருமாளே." - திருப்புகழ் 563 (3) கன்னபுரம் - கர்ணபூரம் - காதணிவகை - கன்னபூரங் கலந்த செங்கண்ணியே -