பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 14. அலரறிவுறுத்தல் செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற் செந்தி லகத்தலர் துாற்றிடுங் கேடு திவாகருளே. (ப உ) செம் - சிவந்த திலகத் து பொட்டினால், அலர் - பரந்த வாள் - ஒளி பொருந்திய நுதல் - நெற்றியையுடைய, வேடிச்சி - வள்ளிநாயகியினது, முகம் வதனம், பங்கசெம் - தாமரையாகும், திலகத்து-எள்ளினது, அலர் - பூ துண்டம் - மூக்காகும், என்னா நின்றஎன்று நலம்புனைந்துரைக்கும், சேய் - குமாரக்கடவுளே! சங்க - கூட்டமாகிய, செந்து ஜீவராசி கட்கு இலக இருப்பிடமான, தலராசி தந்தானை - அண்டங்களைப்படைத்த பிரமனை, சிறையிட்ட வேல் . சிறைப்படுத்திய வேலாயுதத்தை யுடைய, செந்தில் - செந்திற்பதியோனே அகத்து அகங்காரத்தினால், அலர் - துாற்றிடும் . அலர் துாற்றுகின்ற கேள்-சுற்றத்தாரும், துதி - (யாவரும்) துதிக்கத்தக்க வாகு உனது புயத்தை அருள் - கிருபை செய்யவேண்டும். (எ-று) நீ . தோன்றா எழுவாய்.அருள் பயனிலை ஏ-அசை (க-உ)வள்ளிநாயகியினது முகத்தைத் தாமரையென்றும், மூக்கை எட்யூவென்றும் வியக்குங் குமாரக் கடவுளே! பிரமனைச் சிறையிட்ட செந்தினாயகனே! சுற்றத்தார் மிகவும் அலர் துாற்றுகின்றார்கள்; (அது நீங்க) உனது திருப்புயந்தந்தருளவேண்டும். (கு உ) அலரறிவுறுத்தல் என்னுந்துறை திருக்கோவை யாரில் அலராயிரம் எனத் துவக்கும் 180ஆம் பாடலைப் பார்க்க 1. முகம் கமலம் ஒக்கும் - திருமுகங்கமலம்'. தணிகைப்புராணம் - களவு - 43; மூக்கு - எட்பூவுக்கு உவமை - "எட்பூ ஏசிய நாசியாய் இயம்புக" மனோன்மணியம் 12:28, ஒதியும் எள்ளும் தொள்ளைக் குமிழும் மூக்கொக்கும்" - கம்பராமாயணம் - நாடவிட்ட - 52, நலம்புனைந்துரைத்தல் - 'பொங்கிழையைப் புனைநலம் புகழ்ந் தங்கதிர்வேலோன் அயர்வு நீங்கியது" -திருக்கோவ்ை-11 2. வேல் பிரமனைச் சிறையிட்டது . திருப்புகழ் 571 பக்கம் 310, பாடல் 757-பக்கம்-256 கீழ்க்குறிப்பு. 3. சுற்றத்தார் அலர் துாற்றுதல் செய்யுள் 9 பார்க்க