பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 155 திருத்தணி மலையின்கண், மது -தேனும், அனம் - அன்னப் பட்சியும், படு உண்டாகிய, தாமரை - தாமரைகளையுடைய, வாவி பொய்கையில் (வாழும்) திரள் - கூட்டமாகிய, சங்கமே - சங்கினங்களே. (எறு) யாம்-எழுவாய்;செய்வதென்-பயனிலை (க உ) குமாரக் கடவுளினது தணிகையங்கிரித் தாமரைத் தடாகத்தில் வாழுஞ் சங்கினங்களே! என்மேல் மன்மதன் பாணப் பிரயோகஞ் செய்யா நிற்கின்றான்; தென்றலும் சந்திரனும் கடல் முழக்கமும் வருத்துகின்றன; சுற்றத்தாரது கோப தாபமும் உண்டாயிருக்கின்றன;இவற்றை என்ன செய்து கடப்பேன். (கு உ) மன்மதன், தென்றல், கடலொலி, நிலவு இவை விரகதாபத்தை வளர்க்கும் திருப்புகழ் 218 பக்கம் 53 கீழ்க்குறிப்பைப் பார்க்க பாம்பு-வாயு பrணி ஆதலின்-தென்றலை மயில் உச்சிட்ட எச்சில்' என்ற அழகு கவனிக்கற்பாலது. மயிலின் எச்சில் - பாம்பு பாம்பின் எச்சில் வாயு, தணிகை மலையைச் செங்கழுநீர் மலை எனத் தமிழிலும், செங்கல்வகிரி எனத் தெலுங்கிலும், தணிகை முருகனைச் செங்கல்வ ராஜன் (ராயன்) என்வும் கூறுவர். "கனமலிந் தோங்கு கழுநீர்க் குன்றம்" - அப்பர் - 6.134; திருத்தணிகைச் செங்கழநிப் பெருமாளே-திருப்புகழ் 299 தணிகையங்கிரி முடியும் நண்பு தழைத்த செங்கல்வராயரே'-தணிகைக் கலம்பகம்-66, 10. அவையடக்கம் தி ரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால் திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பணிக்க திரளக் கரக்கரை வானிட்டு மைந்தர்புந் திக்கொக்குமே (ப-உ) திர - உறுதியான, ளக்க - லட்சமான, ரக்கரை அசுரர்களை, வென்கண்டவேலன் - புறங்காட்டச்செய்த வேலாயுதனை, திசைமுகன் பிரமாவுக்கும், மால் மாயோனுக்கும், திரள் அநேக அக்கர் கண்ணையுடைய இந்திரனுக்கும், அக்கர் உருத்திராட்ச மாலையையுடைய பரமசிவனுக்கும், ஐ சுவாமியாகிய குமாரக் கடவுளை,யான் பாடநாடுதல்-நான் பாடும்படி கருதுகின்றது.செய்யஅழகிய, சங்கு- சங்குகள், அதிர் - முழங்கும், அளக்கர் சமுத்திரத்தை அக்கரை காண்பான் - கரைகாணும்படி கைந்நீத்திசைவார் .