பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 முருகவேள் திருமுறை (8ஆம் திருமுறை என்னைத் தழுவவேண்டும் என்னும் பயனிலையைக் குறிப்பாய்க் காட்டி நின்றன.ஏ-அசை (க உ) திமிங்கில மீனையுடைய இருண்ட சமுத்திரத்தைக் கோபித்தவனே! வேலவனே அசுரர் குலாந்தகனே வள்ளி தெய்வயானை என்னும் நாயகிமார் தழுவும்படி இதம் பேசும் வீரனே! யான் பூசுஞ் சந்தன முதலிய குளிர்ந்த வஸ்துக்கள் இப்போது உன்மீதுள்ள விரக தாபத்தால் எனக்கு வெப்பத்தை விளைக்கின்றன. ஆதலால் என்னைத் தழுவவேண்டுமென்பது குறிப்பு (கு உ) (1) முருகவேள் கடலைக் கோபித்தது. திருப்புகழ் பாடல் 905, பக்கம் 640 கீழ்க்குறிப்பு பாடல் 1026, (2) தேன் பெருகுமலை - வள்ளிமலை - "மட்டொழுகு சாரமதுரித்த தேனைப் பருக மர்க்கட சமூகம் அமைதொட்டு இறால் எட்டுவரை மன்றற் பைம்புனத்தாள்" பூத வகுப்பு: தேன் வரைவள்ளி - கல்லாடம் 58; உந்திமிர் - 'உந்திவளத்தவள். அந்தாதி 16; உந்திவனவாசமது * 'உந்திவனோற்பவை' - (அந்தாதி 16, 48,89) (3) ஆவியை ஆண்டருள் - என ஆண்டவன் வேண்டுவதை ஆவி உய அருள் பாராய்' எனவரும் திருப்புகழிலும் (209) காண்க. (4) விரகதாபத்தால் சந்தனம் அனல்போலிருப்பதை: சுந்தர மூர்த்தியைக் கண்டு விரகதாபங்கொண்ட பரவையின் நிலையை ஆர நறுஞ் சேறாட்டி யரும் பனிநீர் நறுந்திவலை அருகுவீசி. மடவார் செய்த இவை на и н. н. н. н. பேரழலின் நெய் சொரிந்தா லொத்தன எனக் கூ றுமிடத்துக் காண்க - பெரிய புரா - தடுத்தாட்-173 (ஆரம் - சந்தனம்) (5) என்னை அணைத்தருள் என்று தேரில் வரும் இறைவனை வேண்டினளாம் ஒரு மங்கை அப்போது இறைவன் உமைக்குப் பயந்து கங்கையைச் சடையில் ஒளித்து வைத்தோம்; உமை, கங்கை இவ்விருவரும் காணா வகையில் இந்த மங்கையை நாம் எங்கே ஒளித்து வைப்போம் என்று கருதி, ஒன்றும் பேசாமலே தமது தேரை நடாத்திச் சென்றாராம் 'அன்றடுத்த பங்குமையை அஞ்சிப் படர்சடையில் வைத்தொளித்தாம் கங்கையினை; இவ்விருவர் காணாமல் எங்கிவளை நாமொளிப்பம் என்னா நடாத்தினான் பொற்றித்தேர்" (வெங்கையுலா 264); அவ்வாறே, தேவசேனை - வள்ளி என்னும் இரண்டு தேவிமாரிடத்திலும் எனது ஆவியை ஆண்டருள் என முருகவேள் வேண்டி நிற்க, அவரை நினைந்து ஒரு மங்கை காமவேதனைப் படுகின்றாள்; முருகவேள் எவ்வாறு அம் மங்கையை அணைவது, அது