பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (சுஉ தெய்வச் சோழனானவன் கந்தக்கடவுளை வழிபட்ட சுவாமிமலையினில் வாழும் பெண்ணினுடைய கண் பரம சிவனுண்ட நஞ்சோ? அவள் கழுத்து திருமால் முழக்கின சங்கமோ? (கு.உ) இதனால் தெய்வபக்தி நிறைந்த சோழராஜன் ஒருவன் (மாடக் கோயில்கள் கட்டின கோச செங்கட்சோழன்) திருவேரகத்தில் உள்ள திருக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தான் என்பது புலப்படுகின்றது. திருமால் தேவர்கள் மோகம்படும்படி சங்கத்தை ஊதின வரலாற்றைத் திருப்புகழ் 15,889, 1279 பாடல்களின் குறிப்பிற் காண்க கன் - சிவனுண்ட நஞ்சுக்கு உவமை - "மாதேவருண் முதியவெங்கடுவோ" - திருப்புகழ் 880 இச்செய்யுள் காட்சி என்னும் துறைக்கு உதாரணம் - திருக்கோவையாரிற் செய்யுள் மதிவாணுதல் வளர்வஞ்சியைக் கண்ணுற்றது. 4. உபதேசப் பெருமை தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேனுலகத் தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத் தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே. (ப . உ. தேமொழி - இனிய மொழியையுடையவளாகிய பார்வதியின், அத்தம் - பாதியாகிய (பரமசிவன்), பெற உபதேசம் ப்ெற்றுக்கொள்ள,ஒம் தனக்கு- பிரணவத்திற்கு அன்று பூர்வத்தில், சேணுலக தேவலோகத்தின், தேம் நன்மையெல்லாம், ஒழிய அற்றுப் போகும்படி, தம் தங்கள், சினம் கோபத்தை காட்டு - காட்டிய, அவுணரை - அசுரரை சே மகர ஆண் சுறாமீனுக்கு தேம் - இடமாகிய சமுத்திரத்தில், மொழி கணுக்களையுடைய, அத்தம் - கரங்களும், புயம் தோள்களும், அவர் அவர்களுடைய, சூடிகை - கிரீடங்களும், சிந்த சிதற வென்ற சங்கரித்துச் செயித்த தே - குமாரக் கடவுளானவர், மொழி உரைத்தருளிய, அத்தம் - பொருள், பதினாலுலகும் ஈரேழுலோகத்திலும், அந்தித்தது - பொருந்தி நின்றது. ஒன்று ஒரே தன்மையாக (எறு) அத்தம் - எழுவாய், அந்தித்தது பயனிலை ஏ i