பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 147 (க உ) பரமசிவன் மைந்தனே! சரவணோற்பவனே! திருமால் மருகனே என்று சின்னம் ஆர்ப்பதைக்கேட்டு மயங்கும் பெண்களின் பார்வையையுந்தெய்வயான்ையின் கொங்கையையும் கவசமாகத் தரித்த குமாரக்கடவுள் திருவடி என்றலையின் கண்ணது. (கு-உ) "சரவண மடுவினில் வந்தருள் கந்தன்"-திருவகுப்பு (18) முருகன் உலாவரும் சின்னம் ஆர்ப்பதைக் கேட்டு மயங்குதல்: "சங்கந் திமிலை சமுத்திரம்போலே முழங்க..ஆறுமுகன் ஏறிவரும். தேரழகும் கண்டு திகைப்புற்றாள்". "சொன்ன எழுவருக்கும் மாலேறப் போந்தான் உலா'-இலஞ்சி முருகன் உலா.399,405,456,460 இந்தச் செய்யுளை, மானச பூஜையில் திருவடி சென்னியில் உற்றதைக் காட்டும் செய்யுளாக வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமி கொண்டனர். 3. தலைவியின் கண், கழுத்து வர்ணனை (காட்சி) சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச் சென்னிய மோகம் படவூ தெனத்தொணி செய்தபஞ்ச சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச் சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே (ப-உ)சென்னி சிரசின் கண்ணே,அம்-(கங்கா) சலத்தின், ஒகம் - ஆரவாரம், தவிரா - நீங்காத (பரமசிவன்), அமுதோ உண்ட நஞ்சுதானோ, கண் - விழியானது. திகிரி - சக்கரத்தையேந்தி, வெண்ணெய் - நவநீதமுண்ட, சென்னிய கீதமிசைக்கின்ற திருமாலே, மோகம்பட - (தேவரும்) மயல் கொளும்படி, ஊதென ஊதென்று சொல்ல, தொனிசெய்த -- முழக்கின, பஞ்சசென்னியமோ - பாஞ்ச சன்னியமென்னுஞ் சங்கந்தானோ, கந்தரம் - கழுத்தானது, புனத்தேன் (தினைப் புனத்தின்கண்) மதுரபாஷிணியாகிய வள்ளிநாயகியை, புணர் தழுவும்,தேவை-குமாரக்கடவுளை, தெய்வச் சென்னி-தெய்வத் தன்மையையுடையசோழராஜன், அமோகம்-அதிக ஆசையுற்று, பணிவணங்கிய, பணி . கட்டுவித்த ஏரக சுவாமிமலைச் சார்பில் வாழும், தேமொழிக்கு இனியமொழியையுடைய பெண்ணுக்கு (எறு), கண், கந்தரம் - இரண்டும் எழுவாய், அமுது, பஞ்சசன்னியம் - இரண்டும் பயனிலை, ஏ-அசை