பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (கு உ) இச்செய்யுள் பழமறையாம் திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் காட்டின ஆறு வீடுகளைத்தான் (திருப்பதிகளைத்தான்) ஒதும்படி கட்டளையிடுகின்றது. இதுவே முருகவேளின் துதிக்கு உரிய பாராயண முறையாம். ஆறு திருப்பதிகண் டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே' - கந்தர் கலிவெண்பா தலங்களைத் துதித்தலே பேறுதரும் - பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே சம்பந்தர் 239-1 பழமுதிர் சோலையில் யானைகளின் கூட்டம் - தந்தி சாமு.க. வரை - பாட்டு 73 பார்க்க "களிற்றின். மதமிகு சாரல் மாலிருஞ்சோலை" பெரிய திருமொழி 988 'திண்டிறல் மாகரிசேர் திருமாலிருஞ் சோலை" - பெரிய திருமொழி 9.93 பழமுதிர்சோலையைத் தண் கார்வரை என்றார். கார் - கருமை இம்மலை இருங்குன்றம் எனப்படும் இருமை - கருமை கார் - மேகம் மேகளுசூழ் மலை எனலுமாம். மஞ்சுசூழ் சோலைமலை சிலப்பதிகாரம் குன்றக்குரவை, "சிலம்பாறணிந்த-மாலிருங்குன்றம் பரிபாடல் 15 முருகக்கடவுளின் ஆலயமும் இருந்த காரணம் பற்றியோ சேயோங்கு தண் திருமாலிருஞ் சோலைமலை" என்றார் திருமங்கையாழ்வார்-பெரிய திருமொழி 7.9.7 2. திருவடி என் சென்னியது செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே செப்புங் கவசம் பெறுவார் கனுந்தெய்வ யானைதனச் செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே. (ப உ செ-ரிஷபத்தையுடைய, புங்கவ-தேவாகிய, சங்கர பாலக சங்கரன் பாலனே! தெய்வ - தெய்வீகமாகிய வாவி - சரவணப்பொய்கையின், அம்பு - ஜலத்தில், செ உற்பவித்த, புங்கவ உயர்ந்தோனே! சங்கு - சங்கையுடைய, அரி - விஷ்ணுவுக்கு மருகா - மருகனே! என - என்று, சின்னம் திருச்சின்னமானது, முன்னே - முதலில்தானே, செப்பு - சொல்லி யார்க்கின்ற, உங்கு உவ்விடத்திலேயே (கேட்டு), அவசம் பெறுவார் - மயக்கம் அடையும் (பவனி) மாதரது, கனும் விழிப் பார்வையையும், தெய்வயானை தெய்வ யானையினது, தனச்செப்பும் - கொங்கையாகிய கலசத்தையும், கவசம் புனை சட்டையாக அணிந்த புயன் - தோளையுடையவனாகிய முருகக் கடவுளின், பாதம் - திருவடி என் சென்னியது - என்றலைமீதுற்றது. (எ-று) பாதம் எழுவாய்.சென்னியது. பயனிலை அசை