பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 145 (4) தேவியின் கருணைக் கடாட்சம் - நெஞ்சத் தழுக்கை யெல்லாம் நின் னருட்புனலால் துடைத்தனை சுத் நின்னரு ளேதென்று சொல்லுவதே - தனந்தரும். கல்விதரும் நல்லன எல்லாம் தரும்அபிராமி கடைக்கண்களே. அபிராமி அந்தாதி 27,69 - : Ο : - நூல் 1. ஆறு திருப்பதியை ஒதுக திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய் திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற திருவாவி னன்குடி கொண்டதன் கார்வரை செப்புமினே. (ப உ) திரு . மகா லக்ஷ்மிக்கு ஆவி - உயிராகிய (திருமாலும்), நன்குடி-நற்றேவியை, பங்காளர்-பாகத்திலுடைய பரமசிவனும்,என். மதிக்கத்தக்க முது - பழமையாகிய சீர் சிறப்புப் பொருந்திய உரை (வேதாகமப் பொருளை) சொல்லிய, சதிர் - சதுர்ப்பாட்டையுடைய உவாவினன். இளையோனாகிய (கந்த ஸ்வாமிக்கு), குடி உறைவிடமாகிய, வான் - ஆகாசத்தை ஆர் அளாவிய பரங்குன்று திருப்பரங்குன்றையும், சீரலைவாய் - திருச்செந்திற் பதியையும், திரு செல்வநிறைந்த ஆவினன்குடி - பழநியையும், ஏரகம் ஸ்வாமிமலையையும், குன்றுதோறாடல் - (அக்கடவுள்) திரு விளையாட்டியற்றும் பல குன்றங்களையும், சென்று நடந்து, அதிர் முழங்கும், உவா = யானைகளின், இனன் கூட்டங்கள், குடி கொண்ட நீங்கா துறைகின்றதும், தண் கார் - குளிர்ந்த மேகந் தவழ்வதுமாகிய, வரை. பழமுதிர்சோலையையும், செப்புமின் துதிசெய்யுங்கள். (எ-டு) நீவிர்-தோன்றா எழுவாய்.செப் புமின் பயனிலை ஏ-அசை (க உ) (பார்வதி சமேதரான) பரமசிவனும், லக்ஷ்மீ. சமேதரான திருமாலும் புகழ்கின்ற கீர்த்தியும் வல்லமையுமுடைய குமாரத் கட்வுளுக்கு உறைவிடமாகிய திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்றுதொறாடல், பழமுதிர் சோலைமலை இவ்வாறு தலங்களையுந் துதியுங்கள்.