பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 முருகவேள் திருமுறை (8ஆம் திருமுறை (ப உ) உண் - (கன்றுகள்) உண்ணும், ஆ - பசுக்களையுடைய, முலை - முல்லை நிலத்திற்கு, உ- இறைவனாகிய விஷ்ணுவினது, ፴፬)LD → மேக நிறத்தையும், மைந்து - வலிமையையும், ஆசு (உவர்ப்பாகிய) குற்றத்தையு முடையதாய், அரண் காவலாயிருக்கிற, அம்பரர் சமுத்திரத்திருந்த அசுரரது. உயிர் சேர் - ஆவியை மாய்த்து, உள் - தேவர்கள் மனத்திருந்த நாம் - அச்சத்தை உலையும் கெடுத்தருளும், ஐ சுவாமியே மை - ஆட்டு வாகனத்தில், தா ஏறும், சர் (உஷ்ணத்தையுடைய) அக்கினி, அண் சேர்ந்திருக்கும், நம் நாம் அடைக்க்லம் புகுதற்கிடமாகிய, அருணை வெற்பாள் - அருணகிரியில் வாழும் அம்மையாகிய, உண் - மிகுதியாக, ஆம் பெருகும், முலையும் கற்புடைமைக்கும், ஐ- அழகிய, மை அஞ்சனந் திட்டிய, தா குழையை யெட்டுகின்ற, சரT- அம்பு போன்ற கண்ணினது. நந்தனமும் கிருபைக்கும், ஒப்பில் - இணையில்லாத உண்ணாமுலையுமை உண்ணாமுலை யென்னும் பெயரையுடைய பார்வதியினது, மைந்தா புதல்வனே! சரணம் சரண் உனக்கு - உன்னிடத்தே யான் சரணம் புகுந்தேன். (எ று) யான் - தோன்றா எழுவாய். சரணஞ் சரணம் - பயனிலை.ஏ அசை (க - உ) திருமால் நிறம்போற் கறுத்து உவர்ப்பை யுடையதாயும் வலிய அரணாயுமிருக்கிற சமுத்திரத்திருந்த அசுரரைத் தேவர் அச்சந் திரும்படி வதைத்தவனே! அக்கினி சொரூபமாகிய அருணகிரியிலமர்ந்தருளிக் கற்பிலும் கடாகூடித்திலுந் தனக்கொப்பில்லாத உண்ணாமுலையம்மை புதல்வனே யான் உன் அடைக்கலம் புகுந்தேன். (கு உ) (1) திருமால் முல்லை நிலத்துக் கடவுள் - முல்லை நிலம் - காடும் காடு சூழ்ந்த இடமும் - "மாயோன் மேய காடுறை உலகமும்" - தொல் - அகத் - சூ 5. "முராரி, கானக்கொரு தெய்வதம்" தணிகைப்புராணம் - நாட்டு 60 "அண்ட ரேத்திடு வைகுந்தத் தமர்வதல்லாமல் அண்ட ரேத்திட வனத்தினுந் தெய்வமாய் அமர்வான்" "கனவிருப்புற வனமெனும் யாவையுங் காப்பான்"- நாகை புராணம் நாட்டு-46,47, (2) அக்கினி தேவனுக்கு வாகனம் ஆடு - "மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே' - தனிப் பாடல் பாவகன் தகர்' - தக்கயாக 494. i (3) முல்லை - கற்பின் மிகுதி தோன்ற முல்லை சூடுதல் இயல்பு. 'முல்லையந் தொடை அருந்ததி" (பிரபு-கைலாய 27) - முல்லை சான்ற கற்பின் சிறுபாணாற்றுப்படை304