பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 143 காண்க, கயமுகாசுரனைக் கணபதி வென்ற வரலாறு;- திருப்புகழ் 551, பக்கம் 254 கீழ்க் குறிப்பிற் காண்க திறை (கப்பம்)-திறை கொள்ளுதல்வெற்றிக்குஅடையாளம். "வில்லவனைத் திறைகொண்ட வேற்றண்டகா பதியைப் பல்லவனைப்பாடாதார்"-தக்கயாகப்பரணி 236. "அருணை வாரணத்தானைத் திறைகொண்ட யானையை" என்பதற்கு வேறு பொருளும் காணலாம். அருணையில் விநாயகமூர்த்திக்கு "யானைதிறை கொண்டவன்" என்றொரு பெயர் உண்டு என்பது சதுரணெழிற் சோன சயிலற் றுதிப்பன் மதுரமொழி யன்பர் மனமாம் - குதிரைதிறை கொண்டவ்னென் றேத்தும் குரைகழற்கால் யானை திறை கொண்டவணை என்னுளத்தே கொண்டு. எனவரும் சோணசைலமாலைக் காப்புச் செய்யுளால் அறியக் கிடக்கின்றது. விநாயகர் யானைதிறைகொண்ட வரலாறு பின்வருமாறு: - முகிலன் என்னும் அரசன் அடியவர்களுக்கும் பிறர்க்கும் இடையூறு செய்வதைக் கேள்வியுற்ற குகை நமச்சிவாய தேசிகர் சூலங்கரத்திருக்கச் சோதிமழு வாளிருக்க ஆலமுண்ட காலத் தருளிருக்க - மேலே, எரித்த விழியிருக்க, இந் நாட் சோணேசர் தரித்ததென்ன காரணமோ தாம்" என்று துதித்தவுடன், சிவாக்ஞையால் அன்றிரவு விநாயகக் கடவுள் யானை உருவுடன் சென்று முகிலனைப் பயமுறுத்த அவன் தன் தவறின் நீங்கி வழிபட்டுத் திறையாக (காணிக்கையாக) விடுத்த சில யானைகளைத் திறையாகக் கொண்டனர் விநாயகப்பெருமான்; ஆதலால் அவருக்கு "யானைதிறை கொண்டவர்" எனப் பெயர் வழங்கலாயிற்று. ஆதலால் அருணை வாரணத்தானை என்பதற்கு அருணையில் (வார் அள். நத்து ஆனை) நீண்ட (அள்) காதுகளை உடையனவும் நத்து- விரும்பி ஏற்றுக் கொண்டனவுமானஆனைகளைத் திறையாகக்கொண்ட (யானையை) கண பதியை வாழ்த்துவனே எனவும் பொருள் காணலாம். இதுவுமது உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர் உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள் உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில் உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரனுணக்கே