பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தரந்தாதி (வில்லிபுத்துரார் செய்த உரையுடன்) காப்பு. வாரணத் தானை யயணைவின் னோரை மலர்க்கரத்து வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே. (ப-உ) வாரணத்தானை . அயிராவதத்தை யுடைய இந்திரனையும், அயனை பிரமாவையும், விண்ணோரை - தேவர்களையும், மலர்க்கரத்து - தாமரை மலர்போன்ற கையில், வாரணத்தானை - சங்கையுடைய விஷ்ணுவையும்,மகத்து-(தக்கனது)வேள்வியில்,வென் றோன் வீரபத்திர முகூர்த்தங் கொண்டு) செயித்தவனாகிய பரமசிவனது, மைந்தனை - புதல்வனும், துவச வாரணத்தானை - கோழிக் கொடியையுடைய குமரக்கடவுளை துணை நயந்தானை - தம்பியாக விரும்பியவனும், வயல்- பழனஞ்சூழ்ந்த அருணை அருணா சலத்தில், வாரணத்தானை - கயமுகாசுரனை திறைகொண்ட வெற்றிகொண்ட யானையை - யானைமுகனுமாகிய கணபதியை, வாழ்த்துவன் - (யான்) வணங்குகிறேன் என்றவாறு யான் - தோன்றா எழுவாய். வாழ்த்துவன். பயனிலை,-ஏகாரம்- ஈற்றசை, (க உ) தக்கனது வேள்வியில் இந்திரன் பிரமா விஷ்ணு விண்ணோ ரிவர்களை வீரபத்திர முகூர்த்தங்கொண்டு வென்ற பரமசிவன் மைந்தனும், குமாரக் கடவுளுக்குத் துணைவனும், கயமுகாசுரனை வென்றோனுமாகிய அருணகிரியில் வீற்றிருக்கும் யானைமுக விநாயகனையான் வணங்குகின்றேன்-என்பதாம். (கு உ) தக்கனது வேள்வியில் தண்டிக்கப்பட்டவர்கள் இவரிவர் என்பதைத் திருப்புகழ் 390ஆம் பாடல் பக்கம் 487 கீழ்க்குறிப்பிற்