Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி (காப்பு) வாரணத் தானை
Kandhar andhAdhi (kAppu) - VAraNaththAnai
Kandhar andhAdhi - VAraNaththAnai (kAppu)     தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.149  pg 4.150 
 WIKI_urai Song number: kAppu 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

    காப்பு ... வாரணத் தானை ... விநாயகர்

......... பாடல் .........

      வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து
      வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைதுவச
      வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
      வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.

......... சொற்பிரிவு .........

வாரணத்தானை அயனை விண்ணோரை மலர்க்கரத்து

வாரணத்தானை மகத்து வென்றோன் மைந்தனை துவச

வாரணத்தானை துணைநயந்தானை வயலருணை

வாரணத்தானை திறை கொண்ட யானையை வாழ்த்துவனே.

......... பதவுரை .........

வாரணத்தானை ... ஐராவதம் என்ற யானைக்கு தலைவனாகிய இந்திரனையும்,

அயனை ... பிரம்மனையும்,

விண்ணோரை ... ஏனைய தேவர்களையும்,

மலர்க் கரத்து வாரணத்தானை ... தாமரை போன்ற கையில் பாஞ்ச சன்யம் என்கிற சங்கை ஏந்தி இருக்கும் திருமாலையும்,

மகத்து ... தட்ச யாகத்தில்,

வென்றோன் ... வீரபத்திரன் சொருபத்தில் வந்து ஜெயித்த சிவபெருமானின்,

மைந்தனை ... குமாரனும்,

துவச வாரணத்தானை ... கோழிக்கொடியை உடைய குமாரக் கடவுளை,

துணை நயந்தானை ... சகோதரனாக பெற்றிருப்பவனும்,

வயல் அருணை ... வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில்,

வாரணத்தானை ... யானைமுகத்தை உடைய கஜமுகாசுரனை,

திறை கொண்ட ... வெற்றி கொண்ட,

யானையை ... யானை முகம் கொண்டவனும் ஆகிய கணபதியை,

வாழ்த்துவனே. ... வணங்குகிறேன்.

......... பொழிப்புரை .........

வீரபத்திரர் உருவத்தில் தட்சயாகத்தில் எல்லா தேவர்களையும் சிட்சித்த சிவபெருமானின் குமாரனும் கந்தக் கடவுளின் சகோதரனும் கஜமுகனை
வென்றவரும் ஆன விநாயகரை, எப்போதும் வணங்குகிறேன். (இந்த நூல் சிறப்பாக அமைவதற்காக).

கந்தர் அந்தாதி (காப்பு) - வாரணத் தானை
Kandhar andhAdhi (kAppu) - VAraNaththAnai
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi (kAppu) VAraNaththAnai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]