![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 10 சொல்லுகைக்கு இல்லை Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 10 sollugaikku illai |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 10 ... சொல்லுகைக்கு இல்லை சொல்லுகைக் கில்லையென் றெல்லாமிழந்து சும்மா விருக்கும் எல்லையுட் செல்ல எனைவிட்ட வாஇகல் வேலனல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. ......... சொற்பிரிவு ......... சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல எனை விட்டவா இகல் வேலன் நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபனே. ......... பதவுரை ......... இத்தன்மைத்து என்று அளவிட்டு கூறுவதற்கு இயலாத, மனம் வாக்கு முதலியவற்றை இழந்து அசைவின்றி பேசாமல் சும்மாயிருக்கும் அநுபூதியான எல்லைக்குள்ளே புகுமாறு அடியேனைச் செலுத்தி அருளியவரே, போர்புரியும் வேலினை உடையவரே, கொல்லிப்பண்ணை ஒத்த இனிய மொழிகளையும் கோவைப்பழத்தை ஒத்த சிவந்த இதழையும் உடையவருமான வள்ளி நாயகியாரை மருவுகின்ற பெருமை பொருந்திய மலைபோன்ற புயங்களை உடைய திருமுருகப்பெருமானே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.19 pg 4.20 WIKI_urai Song number: 10 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 10 - sollugaikku illai sollugaikku illai endRu ellAm izhandhu summA irukkum ellaiyuL sella enai vittavA igal vElan nalla kolliyaich sErkkindRa solliyaik kalvaraik kovvaich sevvAi valliyaip pulgindRa mAlvaraith thOL aNNal vallabanE. O' Lord, You have so graciously sent me into frontier of the indescribable state of quietude [bereft of everything including mind and speech]. You are the Lord of warring lance and rock-like shoulders, embracing VaLLi-ammai of the hills; her speech is like the sweet kolli-musical-tune, and her lips are like the reddish kovai-fruit. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |