Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 1327
சைவ முதல்
(மதுரை)

song 1327
saiva mudhal
(madhurai)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next




view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா

......... பாடல் .........

சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே

பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே

கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா

தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சைவ முதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே ... சைவ சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து, சமணர்களை முறியடித்தவனே,

பொய்யர் உ(ள்) ளத்து அணுகானே புனித அருள் புரிவாயே ... பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து அருளுவாயாக.

கையின் மிசைக் கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா ... உனது திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும் அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே,

தெய்வ சற் குரு நாதா திருமதுரைப் பெருமாளே. ... இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே, அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.




இது ஒரு துதிப்பாடல். வேண்டுகோள் எதுவும் இல்லாதது.





Song 1327 (not listed) saiva mudhal (madhurai)

saivamuthaR kuruvAyE samaNarkaLaith ...... theRuvOnE

poyyaruLath thaNukAnE punithavarut ...... purivAyE

kaiyinmisaik kathirvElA kadikamazhaR ...... puthaneepA

theyvasaR gurunAthA thirumathuraip ...... perumALE.

......... Meaning .........

saiva muthal guruvAyE samaNarkaLaith theRuvOnE: You came as the foremost Saivite Master (ThirugnAna SambandhAr) and defeated all the ChamaNas!

poyyar u(L)Laththu aNukAnE punitha aruL purivAyE: You never remain in the heart of liars! Kindly bless me!

kaiyin misaik kathir vElA kadi kamazh aRputha neepA: You elegantly hold in Your hand the dazzling spear! You wear the garland of fragrant kadappa flowers!

theyva saR guru nAthA thirumathuraip perumALE.: You are the great master of Lord SivA, Oh Leader! You have chosen Your abode in the hallowed city of Madhurai, Oh Great One!





This song is essentially a prayer to Lord Murugan.


  (0000-0000-0000_000CA)*fxm

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions