Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 1299
பிறவியலை
(பொதுப்பாடல்கள்)

song 1299
piRaviyalai
(common)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next

 ஒலிப்பதிவுக்கு 
mp3


view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனதனன தாத்தனத் ...... தனதான
   தனதனன தாத்தனத் ...... தனதான
      தனதனன தாத்தனத் ...... தனதான
         தனதனன தாத்தனத் ...... தனதான

......... பாடல் .........

பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே
   பிரகிருதி மார்க்கமுற் ...... றலையாதே
      உறுதிகுரு வாக்கியப் ...... பொருளாலே
         உனதுபத காட்சியைத் ...... தருவாயே

அறுசமய சாத்திரப் ...... பொருளோனே
   அறிவுளறி வார்க்குணக் ...... கடலோனே
      குறுமுனிவ னேத்துமுத் ...... தமிழோனே
         குமரகுரு கார்த்திகைப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பிறவியலை யாற்றினிற் புகுதாதே ... பிறவி என்ற அலைகள் வீசும் ஆற்றுவெள்ளத்தில் மீண்டும் புகாமல் இருக்க,

பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே ... இயற்கை செலுத்தும் வழியில் சென்று இஷ்டப்படி திரியாமல் இருக்க,

உறுதிகுரு வாக்கியப் பொருளாலே ... உறுதியான குருவின் உபதேச மொழியின் உண்மைப் பொருளைத் தந்து,

உனதுபத காட்சியைத் தருவாயே ... உனது திருவடிகளின் தரிசனத்தை அருள்வாயாக.

அறுசமய சாத்திரப் பொருளோனே ... ஆறு சமயங்களின்* சாத்திரங்களுடைய சாரமாய் நிற்பவனே,

அறிவுளறி வார்க்குணக் கடலோனே ... தம் அறிவிலே உன்னை அறிந்தவர்களுக்கு நற்குண சமுத்திரமானவனே,

குறுமுனிவ னேத்துமுத் தமிழோனே ... குறுமுனி அகத்தியர் புகழும் முத்தமிழ் வித்தகனே,

குமரகுரு கார்த்திகைப் பெருமாளே. ... குமர குருவே, கார்த்திகைப் பெண்களின் பெருமாளே.




* ஆறு சமயங்கள் - காணாபத்யம், செளரம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம்.





Song 1299 - piRaviyalai (common)

piRaviyalai AtriniR ...... pugudhAdhE
   pirakirudhi mArggamutr ...... alaiyAdhE
      uRudhi guru vAkkiyap ...... poruLAlE
         unadhu padha kAtchiyaith ...... tharuvAyE

aRusamaya sAththirap ...... poruLOnE
   aRivuL aRi vAr guNak ...... kadalOnE
      kuRu munivan Eththu muth ...... thamizhOnE
         kumara guru kArththikaip ...... perumALE.

......... Meaning .........

piRaviyalai AtriniR pugudhAdhE: In order that I do not fall again into the wavy river of birth,

pirakirudhi mArggamutr alaiyAdhE: and in order that I do not roam about aimlessly as per the dictates of Nature,

uRudhi guru vAkkiyap poruLAlE: I need Your firm and masterly interpretation of the Truth

unadhu padha kAtchiyaith tharuvAyE: and the vision of Your hallowed feet.

aRusamaya sAththirap poruLOnE: You are the essence of the scriptures of the six* sects of religion.

aRivuL aRi vAr guNak kadalOnE: For those who discern You in their intellect, You are the ocean of all virtues!

kuRu munivan Eththu muth thamizhOnE: You are the Lord of the three branches of Tamil, worshipped by the diminutive sage, Agasthya!

kumara guru kArththikaip perumALE.: Oh KumarA, the Master! You are adored by the KArththigai maids, Oh Great One!





* The six sects of Religion are - GANApathyam, Sauram, Saivam, Vaishnavam, SAktham and Kaumaram.


  (1096-0294-0000_000CA)*fam


இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)  audio recording(s) of this song

guruji ragavan

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions