Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 1287
சமய பத்தி
(பொதுப்பாடல்கள்)

song 1287
samaya paththi
(common)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next

 ஒலிப்பதிவுக்கு 
mp3


view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனன தத்தன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே

சரண பத்ம சிவார்ச்சனை ...... தனைநாடி

அமைய சற்குரு சாத்திர ...... மொழிநூலால்

அருளெ னக்கினி மேற்றுணை ...... தருவாயே

உமைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி

உரிய மெய்த்தவ மாக்கிந ...... லுபதேசத்

தமிழ்த னைக்கரை காட்டிய ...... திறலோனே

சமண ரைக்கழு வேற்றிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சமய பத்தி வ்ருதாத்தனை நினையாதே ... மதக் கொள்கையில் உள்ள பக்தி பயனற்றது என்று நினைக்காமல்,

சரண பத்ம சிவார்ச்சனை தனைநாடி அமைய ... உன் திருவடித் தாமரையில் சிவார்ச்சனை செய்ய விரும்பிய யான்மனம் பொருந்தி நிலைத்திருக்க,

சற்குரு சாத்திர மொழிநூலால் ... சற்குரு மூலமாகவும், சாஸ்திர மொழி நூல்கள் மூலமாகவும்,

அருளெனக்கினிமேல் துணைதருவாயே ... நின்னருளை நீ எனக்கு இனிமேல் துணையாகத் தந்தருள்வாயாக.

உமைமுலைத்தரு பாற்கொடு அருள்கூறி ... உமையின் முலை தந்தருளிய பாலை உண்டதன் காரணமாக சிவபிரானின் திருவருளை (தேவாரப் பதிகங்களில்) கூறுவதையே

உரிய மெய்த்தவ மாக்கி ... தனக்கு (திருஞானசம்பந்தருக்கு*) உரிய உண்மைத் தவ ஒழுக்கமாகக் கொண்டு,

நல் உபதேசத் தமிழ்தனை ... நல்ல உபதேசங்களைக் கொண்ட தமிழ் தன்னை

கரை காட்டிய திறலோனே ... கரை கண்ட பராக்கிரமசாலியே,

சமணரைக்கழுவேற்றிய பெருமாளே. ... சமணர்களை (வாதில் வென்று) கழுவேற்றிய பெருமாளே.




* முருகனே திருஞானசம்பந்தராக அவதரித்ததாக அருணகிரிநாதர் பல இடங்களில் கூறியுள்ளார்.





Song 1287 - samaya paththi (common)

samaya baththi vrudhAth thanai ...... ninaiyAdhE

charaNa padhma sivArchchanai ...... thanai nAdi

amaiya saRguru sAththira ...... mozhinUlAl

aruLenak kinimEl thuNai ...... tharuvAyE

umai mulaith tharu pAlkodu ...... aruL kURi

uriya meyththava mAkki nal ...... upadhEsath

thamizh thanaikkarai kAttiya ...... thiRalOnE

samaNaraik kazhuvEtriya ...... perumALE.

......... Meaning .........

samaya baththi vrudhAth thanai ninaiyAdhE: Without concluding that religious belief is worthless,

charaNa padhma sivArchchanai thanai nAdi amaiya: I would like to make Saivite offerings to Your lotus feet. For that to happen,

saRguru sAththira mozhinUlAl: the guidance of a Master and the instructions from the scriptures

aruLenak kinimEl thuNai tharuvAyE: will have to be my protection from now on. Kindly bless me with that support.

umai mulaith tharu pAlkodu aruL kURi: By imbibing the holy milk from the breast of Mother UmA, You were able to sing (as ThirugnAna Sambandhar*) the sacred hymns (ThEvAram) on Lord SivA!

uriya meyththava mAkki nal upadhEsath: That became Your true and committed mission, and You preached to the world high moral values.

thamizh thanaikkarai kAttiya thiRalOnE: You became a paradigm, standing loftily on the banks of the River Tamil, Oh competent one!

samaNaraik kazhuvEtriya perumALE.: You sent the ChamaNas to the gallows (after conquering them in debate), Oh Great One!





* AruNagirinAthar has said in several songs that ThirugnAna Sambandhar is the reincarnation of Murugan.


  (1090-0269-0000_000CA)*fam


இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)  audio recording(s) of this song

guruji ragavan

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions