Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 1252
துத்தி நச்சு அரா
(பொதுப்பாடல்கள்)

song 1252
thuththi nachchu arA
(common)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next




view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தத்த தத்த தானனம் தத்த தத்த தானனம்
     தத்த தத்த தானனத் ...... தனதான

......... பாடல் .........

துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
     சுக்கி லக்க லாமிர்தப் ...... பிறைசூதம்

சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்
     சுத்த சொற்ப கீரதித் ...... திரைநீலம்

புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
     பொற்பு மத்து வேணியர்க் ...... கருள்கூரும்

புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
     புற்பு தப்பி ராணனுக் ...... கருள்வாயே

பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்
     பக்க மிட்டு லாவியச் ...... சுரர்மாளப்

பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்
     பத்ம சிட்ட னோடமுத் ...... தெறிமீனக்

கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்
     துட்க முத்து வாரணச் ...... சதகோடி

கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்
     கைப்பி டித்த சேவகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

துத்தி நச்சு அரா இளம் பிச்சி நொச்சி கூவிளம் ... புள்ளிகளைக் கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை மலர், நொச்சிப் பூ, வில்வம்,

சுக்கிலக் கலா அமிர்தப் பிறை சூதம் ... வெண்ணிறம் உடையதாய் கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர்,

சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் ... சுத்தமான ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர், தேள்,

சுத்த சொல் பகீரதித் திரை நீலம் ... புகழை உடைய, அலைகள் வீசும் கங்கை நதி, நீலோற்பலம்,

புத் (து) எருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை ... புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம், கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை,

வேணியர்க்கு அருள் கூரும் ... (இவைகளை அணிந்த) சடைப் பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய,

புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் ... புத்தியும், அஷ்ட மா சித்திகளும்* வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும் கொண்டதுமான உபதேச மொழியை,

புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே ... நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக.

பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவி ... வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய, அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி,

அச்சுரர் மாள பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி ... அந்த அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து,

வாய் தரும் பத்ம சிட்டன் ஓட ... அச்சத்தால் வாய்விட்டு அலறிய சூரபத்மனாகிய** மேலோனும் ஓட,

முத்து எறி மீனம் கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க ... முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம் கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க,

மா முறிந்து உட்க ... மாமரமாக மறைந்து நின்ற சூரன் கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும்,

முத்து வாரணச் சத கோடி கைக் களிற்று வாரணம் புக்கு ஒளிக்க ... முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக் கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும்,

வாரணம் கைப் பிடித்த சேவகப் பெருமாளே. ... சேவற் கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே.



  * அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:

அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.
மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.
கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.
லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.
பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).
பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.
ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.
வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.




** பத்ம சிட்டன் = சூர பத்மன். சூரன் பகுதி ஆணவத்தைக் குறிக்கும். பத்மன் பகுதி அறிவைக் குறிக்கும்.
போருக்குப் பின் ஆணவம் மயிலாயிற்று. பத்மப் பகுதி சேவலாகிக் கொடியாய் உயர்த்தப்பட்டது.





Song 1252 - thuththi nachchu arA (common)

thuththi naccha rAviLam picchi nocchi kUviLam
     sukki lakka lAmirthap ...... piRaicUtham

suththa raththa pAdalam poRka dukkai yEdalam
     suththa soRpa keerathith ...... thiraineelam

puththe rukku pAzhikang koththe duththa thALithaN
     poRpu maththu vENiyark ...... karuLkUrum

puththi siththi vAykanam suththa sathya vAsakam
     puRpu thappi rANanuk ...... karuLvAyE

paththi yutRa thOkaiyam pacchai vetRi vAkanam
     pakka mittu lAviyac ...... curarmALap

pakka vittu vAyniNam kakka vetti vAytharum
     pathma sitta nOdamuth ...... theRimeenak

kaiththa laipra vAkaiyun thaththa Likka mAmuRin
     thutka muththu vAraNac ...... cathakOdi

kaikka LitRu vAraNam pukko Likka vAraNam
     kaippi diththa sEvakap ...... perumALE.

......... Meaning .........

thuththi nacchu arA iLam picchi nocchi kUviLam: The spotted and poisonous serpent, fresh and tender jasmine and nochchi flowers, vilwa leaves,

sukkilak kalA amirthap piRai cUtham: white nectar-filled crescent moon with many phases, green mango leaves,

suththa raththa pAdalam pon kadukkai Edu alam: pure blood-red flower of pAthiri, golden flower of kondRai (Indian laburnum), a scorpion,

suththa sol pakeerathith thirai neelam: the celebrated river Gangai full of waves, blue lily,

puth(thu) erukku pAzhi kam koththu eduththa thALi thaN poRpu maththai: fresh flower of erukkai, the famous skull of BrahmA, bunches of aRugam (cynodon) grass, and cool and pretty flower of Umaththai -

vENiyarkku aruL kUrum: all these adorn the matted hair of Lord SivA; You preached to that SivA

puththi siththi vAy kanam suththa sathya vAsakam: a sacred, famous, pure and truthful principle that represents the intellect, containing in itself the eight great sidhdhis* (miraculous deeds);

puRputham pirANanukku aruLvAyE: will You kindly teach that to me as I am clinging to a transient life like that of a water bubble?

paththi utRa thOkai am pacchai vetRi vAkanam pakkam ittu ulAvi: Your peacock has a neat row of plumes and a beautiful green hue; You mounted from the side of that triumphant vehicle and flew around;

accurar mALa pakkavittu vAy niNam kakka vetti: You killed all those demons by stabbing them and making their split open jaws spew flesh;

vAy tharum pathma sittan Oda: making the scared and screaming SUrapadhman**, the realised one, run for life,

muththu eRi meenam kaiththalai pravAkaiyum thaththaLikka: while the sea, a vast deluge, tossing pearls through its waves and containing plenty of fish, rose in agitation;

mA muRinthu utka: the demon SUran in the disguise of a mango tree was terrified with its branches breaking and giving way;

muththu vAraNac catha kOdi kaik kaLitRu vAraNam pukku oLikka: the countless conch shells that yield pearls and the eight elephants with trunks (guarding the eight directions) got scared and went into hiding;

vAraNam kaip pidiththa sEvakap perumALE.: when You raised the staff of Rooster in Your hand, Oh valorous and Great One!




  * Eight Primary Siddhis (occult powers):


aNima: reducing one's body to even less than the size of an atom;
mahima: expanding one's body to an infinitely large size;
garima: becoming infinitely heavy;
laghima: becoming almost weightless;
prApti: having unrestricted access to all bodies and places;
prAkAmya: realising success everywhere;
eesatva: possessing absolute lordship;
vasitva: the power to subjugate all.





** pathma sittan = sUra pathman. The sUran part represents arrogance; pathman part denotes Knowledge; at the end of the war, the arrogant part became the peacock and the Knowledge part became the Rooster, hoisted in the staff of Murugan.


  (1065-0000-0000_000CA)*fxm

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions