Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 1070
புரக்க வந்த
(பொதுப்பாடல்கள்)

song 1070
purakka vandha
(common)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next




view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
     தனத்த தந்தனம் ...... தனதான

......... பாடல் .........

புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்
     புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப்

புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்
     புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே

செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்
     திளைக்கு நின்திறம் ...... புகலாதிந்

த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்
     தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ

குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்
     குவட்டி லங்கையுந் ...... துகளாகக்

கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்
     கொதித்து மண்டுவெம் ...... பகையோடத்

துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்
     துரத்த னும்பிறந் ...... திறவாத

சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புரக்க வந்த நம் குறக் கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி ... நம்மை ஆண்டு காக்க வந்த, நமது குறவர் குலக் கரும்பாகிய வள்ளியை அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு நீ அன்று ஒரு நாள் சென்று பார்த்து, நட்புப் பேச்சுக்களைப் பேசி,

புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புதுக் குரும்பை மென் புய (ம்) மீதே ... புடைத்துப் பருத்து அலங்காரம் விளங்க எழுந்துள்ளதும், வலிமையும் அற்புத எழிலும் வாய்ந்ததும், இளநீர் போன்றதும் ஆகிய மார்பகத்தின் மீதும், மென்மையான தோள்கள் மீதும்,

செருக்க நெஞ்சகம் களிக்க அன்புடன் திளைக்கு (ம்) நின் திறம் புகலாது ... காம மயக்கம் கொள்ளும்படி மனத்தில் மகிழ்ச்சி பொங்க அன்புடன் இடைவிடாது தழுவிய உன்னுடைய மேன்மையான குணத்தைச் சொல்லிப் புகழாமல்,

இந்திரியக் கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ ... ஐம்பொறிகளைக் கொண்ட உடலைச் சுமந்து, துக்கம் நிரம்பும் கலக்கத்தை நான் எப்போது நீங்கி இருப்பேனோ?

குரக்கினம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாகக் கொதித்த கொண்டலும் த்ரி அக்ஷரும் ... குரங்கின் கூட்டங்களைத் தன்னுடன் கொண்டு வந்து அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படி கோபித்து எழுந்த மேக நிறம் கொண்ட திருமாலும், (சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும்,

கடம் கொதித்து மண்டு வெம் பகை ஓடத் துரக்கும் விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் ... மத நீர் கொதிப்பு உற்று நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும், ஒளி வாய்ந்ததும், பூண் உடையதும், வீரம் நிறைந்ததும் ஆன ஐராவதம் என்னும் யானைக்குத் தலைவனுமாகிய இந்திரனும்,

பிறந்து இறவாத சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர் தம் பெருமாளே. ... என்றும் நிலைத்து நிற்கும் பேற்றைப் பெற்றவர்களாய் நித்திய சுகத்தில் இருக்கும் அடியார்களும், மூன்று உலகங்களிலும் உள்ள அன்பர்கள் யாவரும் சேர்ந்து துதி செய்து போற்றும் தேவர்கள் பெருமாளே.





Song 1070 - purakka vantha (common)

purakka vanthanang kuRakka rumpaimen
     punaththi lanRusen ...... RuRavAdip

pudaiththa langrutham padaiththe zhunthathiN
     puthukku rumpaimen ...... puyameethE

serukka nenjakang kaLikka anpudan
     thiLaikku ninthiRam ...... pukalAthin

thriyakka danjuman thalakkaN maNdidun
     thiyakka menRozhin ...... thiduvEnO

kurakki nangkoNarn tharakkar thaNdamung
     kuvatti langaiyun ...... thukaLAkak

kothiththa koNdalun thriyaksha rumkadang
     kothiththu maNduvem ...... pakaiyOdath

thurakkum vimpakim puripra saNdasin
     thuraththa numpiRan ...... thiRavAtha

sukaththi lanparum sekathra yangaLun
     thuthikku mumpartham ...... perumALE.

......... Meaning .........

purakka vantha nam kuRak karumpai men punaththil anRu senRu uRavAdi: She came to win us over in order to protect us; She is our dear VaLLi, the sugarcane-like damsel of the KuRavAs; You went one day to the serene millet-field to see her and spoke to her in a friendly manner;

pudaiththu alangrutham padaiththu ezhuntha thiN puthuk kurumpai men puya(m) meethE: You fell for her bulging and bejewelled bosom that are strong and exquisitely beautiful, looking like tender coconuts, and for her smooth shoulders;

serukka nenjakam kaLikka anpudan thiLaikku(m) nin thiRam pukalAthu: and in a passionate trance, You happily hugged her, without releasing her and with overwhelming love; not praising Your great quality,

inthiriyak kadam sumanthu alakkaN maNdidum thiyakkam enRu ozhinthiduvEnO: I have been carrying the burden of this body consisting of five sensory organs, filled with perplexity and misery; when will I be able to get rid of that?

kurakkinam koNarnthu arakkar thaNdamum kuvattu ilangaiyum thukaLAkak kothiththa koNdalum thri aksharum: He brought along with him an army of monkeys and, in a rage, smashed the weapons of the demons and their mountainous country, Lanka, to pieces; He is Lord VishNu with the hue of black cloud; along with Him, Lord SivA, endowed with three eyes (the Sun, the Moon and Agni, the Fire),

kadam kothiththu maNdu vem pakai Odath thurakkum vimpa kimpuri prasaNda sinthuraththanum: and IndrA, the leader of the elephant AirAvadham that is bright and valorous, well-decorated with ornaments, and that gets wildly enraged and chases away evil enemies, with its saliva oozing;

piRanthu iRavAtha sukaththil anparum seka thrayangaLum thuthikkum umpar tham perumALE.: and Your devotees in eternal bliss having been granted the boon of immortality and the dear ones in the three worlds have all assembled to praise and worship You; You are the Lord of the celestials, Oh Great One!

(0917-0000-0000_000CA)*fxm1



view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions