Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 866
பஞ்சுசேர் நிர்த்த
(கும்பகோணம்)

song 866
panjusEr nirththa
(kumbakONam)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next




view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தந்தனா தத்தத் ...... தனதான

......... பாடல் .........

பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்

பங்கமார் தொக்கிற் ...... படியாமற்

செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன்

செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ

பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர்

பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா

குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா

கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பஞ்சுசேர் நிர்த்தப் பதமாதர் ... பஞ்சு போல் மென்மையான பாதங்களை, நடனம் ஆடும் பாதங்களை உடைய மாதர்களின்

பங்கமார் தொக்கிற் படியாமல் ... குற்றம் நிறைந்த உடம்புத் தோலில் நான் வீழ்ந்து விடாமல்,

செஞ்சொல்சேர் சித்ரத் தமிழால் ... தேர்ந்தெடுத்த சொற்கள் அமைந்துள்ள அழகிய தமிழால் பாடல்களைப் பாடி

உன்செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ ... செம்பொன்னுக்கு நிகரான உனது அன்பைப் பெற மாட்டேனோ?

பஞ்சபாணத்தற் பொருதேவர் ... ஐந்து மலர்ப் பாணங்களைக் கொண்ட மன்மதனைச் சுட்டெரித்த தேவராகிய சிவபிரானின்

பங்கில்வாழ் சத்திக் குமரேசா ... இடப்பாகத்தில் வாழ்கின்ற பராசக்தியின் குமரனாம் ஈசனே,

குஞ்சரீ வெற்புத் தனநேயா ... ஐராவதம் என்னும் யானை வளர்த்த தேவயானையின் மலை போன்ற மார்பை நேசித்தவனே,

கும்பகோ ணத்திற் பெருமாளே. ... கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.





Song 866 - panjusEr nirththa (kumbakONam)

panjusEr nirththap ...... pathamAthar

pangamAr thokkiR ...... padiyAmaR

senjolsEr chithrath ...... thamizhAlun

semponAr vaththaip ...... peRuvEnO

panjapA NaththaR ...... poruthEvar

pangilvAzh saththik ...... kumarEsA

kunjaree veRputh ...... thananEyA

kumpakO NaththiR ...... perumALE.

......... Meaning .........

panjusEr nirththap pathamAthar: The dancing girls' feet are soft like cotton.

pangamAr thokkiR padiyAmal: Without indulging in their skins covering their sinful bodies,

senjolsEr chithrath thamizhAl unsempon Arvaththaip peRuvEnO: shall I be able to compose songs using the choicest words in the beautiful language of Tamil seeking Your reddish gold-like love?

panjapANaththaR poruthEvar: Lord SivA fought and destroyed Manmathan (God of Love) who wielded five arrows of flowers;

pangilvAzh saththik kumarEsA: on the left part of that SivA's body is Goddess ParAsakthi, and You are Her son Lord Kumara!

kunjaree veRputh thananEyA: You fell for the mountain-like bosoms of DEvayAnai, the damsel reared by the elephant, AirAvadham.

kumpakO NaththiR perumALE.: Your abode is KumbakONam, Oh Great One!

(0741-0000-5546_xcz)*fxm1



view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions