Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 830
விழுதாதெனவே
(நாகப்பட்டினம்)

song 830
vizhudhAdhenavE
(nAgappattinam)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next

 ஒலிப்பதிவுக்கு 
mp3


view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

......... பாடல் .........

விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே ...... புரிதாக

விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார் ...... மயலாலே

அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா ...... துனையோதி

அலர்தா ளடியே னுறவாய் மருவோ
     ரழியா வரமே ...... தருவாயே

தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே ...... தருதேவா

சுரர்பூபதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவே
     லிறைவா எனையா ...... ளுடையோனே

இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விழுதா தெனவே கருதா துடலை ... (இறைவனருளால்) விழுகின்ற தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று புரிந்து கொள்ளாமல்,

வினைசேர் வதுவே புரிதாக ... வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விரும்புவதாக,

விருதா வினிலே ... வாழ்நாளை வீணாக்கி,

உலகா யதமேலிடவே ... (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் புத்தி மேலிட,

மடவார் மயலாலே ... பெண்களின் மேல் ஆசை மயக்கம் மிகுந்து,

அழுது ஆகெடவே அவமாகிட ... அழுதும், கெட்டுப்போயும், கேவலமாகி

நாளடைவே கழியாது ... வாழ்க்கை முழுவதும் கழிந்து போகாமல்,

உனையோதி ... உன்னைப் புகழ்ந்து துதித்து,

அலர்தா ளடியே னுறவாய் ... மலர்ந்த தாமரை போன்ற உன் திருவடிகளே எனக்கு உறவாக

மருவோரழியா வரமே தருவாயே ... பொருந்திய ஒப்பற்ற அழியாத வரம் நீ தந்தருள்வாயாக.

தொழுதார் வினை ... தொழுகின்ற அடியார்கள்தம் வினையின்

வே ர்யோ டறவே ... வேர் அடியோடு அற்றுப்போகும்படியாக

துகள்தீர் பரமே தருதேவா ... குற்றமற்ற பரமபதத்தைத் தரும் தேவனே,

சுரர்பூபதியே ... தேவர்களுக்கு அரசனே,

கருணா லயனே ... கருணைக்கு இருப்பிடமானவனே,

சுகிர்தா அடியார் பெருவாழ்வே ... புண்ணியனே, அடியார்களின் பெருவாழ்வே,

எழுதா மறைமா முடிவே ... எழுதப்படாத மறையாம் வேதத்தின் முடிவானவனே,

வடிவேலிறைவா ... கூரிய வேலை ஏந்திய இறைவனே,

எனையாளுடையோனே ... என்னை ஆட்கொண்டுள்ளவனே,

இறைவா எதுதா அதுதா ... இறைவனே, நீ எது தரவேண்டுமோ அதைத் தந்தருள்.

தனையே இணைநா கையில் ... தனக்குத் தானே இணையாகும் நாகப்பட்டினத்தில்

வாழ் பெருமாளே. ... வீற்றிருக்கின்ற பெருமாளே.





Song 830 - vizhudhAdhenavE (nAgappattinam)

vizhudhA dhenavE karudhAdh udalai
     vinaisEr vadhuvE ...... puridhAga

virudhA vinilE ulagA yadha mEl
     idavE madavAr ...... mayalAlE

azhudhA kedavE avamAgida nAL
     adaivE kAzhiyAdh ...... unaiyOdhi

alarthAL adiyEn uRavAy maruvavOr
     azhiyA varamE ...... tharuvAyE

thozhudhAr vinai vEradiyOd aRavE
     thugaLtheer paramE ...... tharudhEvA

surar bUpathiyE karuNA layanE
     sukirthA vadiyAr ...... peru vAzhvE

ezhudhA maRai mA mudivE vadivEl
     iRaivA enaiyAL ...... udaiyOnE

iRaivA edhuthA adhuthA thanaiyE
     iNainA gaiyil vAzh ...... perumALE.

......... Meaning .........

vizhudhA dhenavE karudhAdh udalai: Without realizing that this body is nothing but a sperm which fell into a womb (by Divine grace),

vinaisEr vadhuvE puridhAga: I have been multiplying my karmas willingly,

virudhA vinilE: wasting my life;

ulagA yadha mElidvE: my mind was filled up with worldly matters (thinking that this body is the soul and carnal pleasure is the heaven) and

madavAr mayalAlE: passion for women

azhudhA kedavE avamAgida: made me cry, degenerate and degrade myself.

nALadaivE kAzhiyAdh: I do not want to waste my life in this way.

unaiyOdhi alarthAL adiyEn uRavAy: I must praise Your fresh flowery feet which are my only relationship,

maruvavOr azhiyA varamE tharuvAyE: and You must grant me that unique and everlasting boon.

thozhudhAr vinai vEradiyOd aRavE: To uproot the karmas of Your devotees,

thugaLtheer paramE tharudhEvA: You grant them unblemished Heaven, Oh Lord!

surar bUpathiyE karuNA layanE: You are the King of all DEvAs and the Seat of Compassion!

sukirthA vadiyAr peru vAzhvE: You are the Blessed One and Bestower of great life to Your devotees!

ezhudhA maRai mA mudivE: You are at the Zenith of unwritten VEdAs!

vadivEl iRaivA enaiyAL udaiyOnE: Oh God with the Spear, You have already conquered me!

iRaivA edhuthA adhuthA: My God, grant me whatever You deem fit to grant me!

thanaiyE iNainA gaiyil vAzh perumALE.: You reside at unique NAgappattinam, Oh Great One!

(0709-0218-4450_000CA)*fam1



இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)  audio recording(s) of this song

guruji ragavan

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions