Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 779
உரத்துறை போத
(வைத்தீசுரன் கோயில்)

song 779
uraththuRai bOdha
(vaiththeeswaran kOyil)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next

 ஒலிப்பதிவுக்கு 
mp3


view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனத்தன தானத் ...... தனதான

......... பாடல் .........

உரத்துறை போதத் ...... தனியான

உனைச்சிறி தோதத் ...... தெரியாது

மரத்துறை போலுற் ...... றடியேனும்

மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ

பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே

பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே

வரத்துறை நீதர்க் ...... கொருசேயே

வயித்திய நாதப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உரத்துறை போதத் தனியான ... உறுதி வாய்ந்த ஞானத்தின் தனிப்பொருளான

உனைச்சிறிதோதத் தெரியாது ... உன்னைச் சிறிதளவேனும் போற்றத் தெரியாமல்

மரத்துறை போலுற்று அடியேனும் ... மரக்கட்டை போன்று இருந்து அடியேனும்

மலத்திருள் மூடிக் கெடலாமோ ... ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் இருள் போல் என் மனத்தை மூடி நான் கெட்டுப்போகலாமோ?

பரத்துறை சீலத்தவர் வாழ்வே ... மேலான நிலையிலுள்ள புனித வாழ்க்கையர்களின் செல்வமே,

பணித்தடி வாழ்வுற்று அருள்வோனே ... உன் திருவடியில் பணிவித்து வாழ்வு பெற அருள்வோனே,

வரத்துறை நீதர்க்கு ஒருசேயே ... வரம் தருவதே தன் நீதியாகக் கொண்ட சிவனாரின் ஒப்பற்ற சேயே,

வயித்திய நாதப் பெருமாளே. ... வைத்தீசுரன்கோயில் நாதனாம் சிவனுக்குப் பெருமாளே.





Song 779 - uraththuRai bOdha (vaitheeswaran kOyil)

uraththuRai bOdhath ...... thaniyAna
     unaichchiRi dhOdhath ...... theriyAdhu

maraththuRai pOlutr ...... adiyEnum
     malath iruL mUdik ...... kedalAmO

paraththuRai seelath ...... thavarvAzhvE
     paNiththadi vAzhvutr ...... aruLvOnE

varaththuRai neethark ...... orusEyE
     vayidhdhiya nAthap ...... perumALE.

......... Meaning .........

uraththuRai bOdhath thaniyAna: That which is unique, strong and an entity of knowledge

unaichchiRi dhOdhath theriyAdhu: is nothing but You; but I did not know to worship You even a little.

maraththuRai pOlutr adiyEnum: I simply stood there as a dumb wood from the tree.

malath iruL mUdik kedalAmO: Why was my mind corrupted by darkness from the three vices, namely haughtiness, karma and delusion?

paraththuRai seelath thavarvAzhvE: You are the treasure of the virtuous, pious and wise people leading venerable lives!

paNiththadi vAzhvutr aruLvOnE: You have to command me with grace to serve Your holy feet.

varaththuRai neethark orusEyE: You are the unique son of SivA whose way is always to grant boons!

vayidhdhiya nAthap perumALE.: You are the Master of the Lord at Vaitheeswaran KOyil, Oh Great One!

(0666-0237-4324_000CA)*fam1



இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)  audio recording(s) of this song

P. Sambandam Gurukkal  S. Sivakumar  Guruji Ragavan
view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions