Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 636
திருமகள் உலாவும்
(கதிர்காமம்)

song 636
thirumagaL ulAvum
(kadhirgAmam)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next

 ஒலிப்பதிவுக்கு 
mp3


view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான

......... பாடல் .........

திருமக ளுலாவு மிருபுய முராரி
     திருமருக நாமப் ...... பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதரு குமாரப் ...... பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ...... பெருமாள்காண்

மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திருமகள் உலாவும் இருபுய ... லக்ஷ்மிதேவி விளையாடும் இரண்டு புயங்களும் உடைய

முராரி திருமருக நாமப் பெருமாள்காண் ... திருமாலின் அழகிய மருகன் என்ற திருநாமத்தைக் கொண்ட பெருமான் நீதான்.

செகதலமும் வானும் ... மண்ணுலகிலும் விண்ணுலகிலும்

மிகுதிபெறு பாடல் ... மிகவும் போற்றிப் புகழும் (தேவாரப்) பாடல்களை

தெரிதரு குமாரப் பெருமாள்காண் ... அளித்தருளிய (ஞானசம்பந்த) குமாரப்பெருமான் நீதான்.

மருவும் அடியார்கள் மனதில்விளையாடு ... வணங்கும் அடியார்களின் மனதிலே விளையாடும்

மரகதமயூரப் பெருமாள்காண் ... பச்சை மயில் ஏறும் பெருமான் நீதான்.

மணிதரளம் வீசி யணியருவி சூழ ... மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி* சூழ்ந்து

மருவு கதிர்காமப் பெருமாள்காண் ... விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீதான்.

அருவரைகள் நீறு படஅசுரர் மாள ... பெருமலைகள் பொடிபட, அசுரர்கள் இறக்க

அமர்பொருத வீரப் பெருமாள்காண் ... போர் புரிந்த வீரப் பெருமான் நீதான்.

அரவுபிறை வாரி விரவுசடை வேணி ... பாம்பு நிலவு, கங்கை நீர் இவை கலந்த சடையுடைய

அமலர்குரு நாதப் பெருமாள்காண் ... பரிசுத்தமான சிவனுக்கு குருநாதப்பெருமான் நீதான்.

இருவினையிலாத ... நல்வினை தீவினை என்பதே இல்லாதவர்களும்

தருவினைவி டாத இமையவர் ... கற்பகத் தருவை விட்டு நீங்காதவர்களுமான தேவர்களின்

குலேசப் பெருமாள்காண் ... குலத்துக்கு அரசன் தேவேந்திரனுக்கும் பெருமான் நீதான்.

இலகுசிலை வேடர் கொடியின் ... விளங்கும் வில் ஏந்திய வேடர்குலக் கொடி வள்ளியின்

அதிபார இருதனவிநோதப் பெருமாளே. ... அதிக பாரமான இரு மார்பிலும் களிக்கும் பெருமாளே.




* அருவி - கதிர்காமத்துக்கு அருகில் மாணிக்க நதியில் உள்ளது.





Song 636 - thirumagaL ulAvum (kadhirgAmam)

thirumagaL ulAvum irubuya murAri
     thirumaruga nAmap ...... perumALkAN

jegathalamum vAnu migudhipeRu pAdal
     theritharu kumArap ...... perumALkAN

maruvumadi yArgaL manadhil viLaiyAdu
     marakatha mayUrap ...... perumALkAN

aNitharaLam veesi aNiyaruvi sUzha
     maruvu kadhir kAmap ...... perumALkAN

aruvaraigaL neeRu pada asurar mALa
     amarporudha veerap ...... perumALkAN

aravupiRai vAri viravusadai vENi
     amalarguru nAthap ...... perumALkAN

iruvinaiy ilAdha tharuvinai vidAdha
     imaiyavar kulEsap ...... perumALkAN

ilagusilai vEdar kodiyinadhi bAra
     iruthana vinOdhap ...... perumALE.

......... Meaning .........

thirumagaL ulAvum irubuya murAri: Lakshmi embraces both shoulders of Vishnu

thirumaruga nAmap perumALkAN: whose handsome nephew is none but You, Great One!

jegathalamum vAnu migudhipeRu pAdal: The Tamil songs (ThEvAram) most famous in both worlds

theritharu kumArap perumALkAN: were composed by You (as ThirugnAna Sambandhar), Great One!

maruvumadi yArgaL manadhil viLaiyAdu: You play in the hearts of Your devotees worshipping You

marakatha mayUrap perumALkAN: You mount the emerald-green peacock, it's Yours, Great One!

aNitharaLam veesi aNiyaruvi sUzha: Offering pearls and gems are pretty waterfalls*, encircling

maruvu kadhir kAmap perumALkAN: lovely KadhirgAmam, and You are its Lord, Great One!

aruvaraigaL neeRu pada asurar mALa: To demolish huge mountains and to destroy the demons (asuras)

amarporudha veerap perumALkAN: You waged a war, Oh valorous and Great One!

aravupiRai vAri viravusadai vENi: The snake, the crescent moon and the river (Ganga) adorn the tresses

amalarguru nAthap perumALkAN: of the pure one, SivA; You are His Master, Great One!

iruvinaiy ilAdha tharuvinai vidAdha imaiyavar: For the DEvAs, who do not have to suffer the karmas (good and bad deeds) and who would never leave their land (heaven) with its KaRpaga Tree, and for

kulEsap perumALkAN: their Lord, IndrA, You are the Greatest Lord!

ilagusilai vEdar kodiyin: With the damsel, VaLLi, belonging to the tribe of hunters bearing the bow,

adhi bAra iruthana vinOdhap perumALE.: You love to play romantically on her bosom, Oh Great One!





* waterfalls - can be found in the MAnikka River near KadhirgAmam, Southeast Sri LankA.


  (0547-0128-2566_000CA)*fam


இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)  audio recording(s) of this song

Singapore Subhashini  Guruji Ragavan  P. Sambandam Gurukkal
view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 





previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions