Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 588
கரை அற உருகுதல்
(திருச்செங்கோடு)

song 588
karai aRa urugudhal
(thiruchchengkOdu)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next




view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனதன தனதன தனதன தனதன
     தந்தான தந்த ...... தனதான

......... பாடல் .........

கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
     கண்டான செஞ்சொல் ...... மடமாதர்

கலவியில் முழுகிய நெறியினி லறிவுக
     லங்காம யங்கும் ...... வினையேனும்

உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே

உரவொடு புனைதர நினைதரு மடியரொ
     டொன்றாக என்று ...... பெறுவேனோ

வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி
     வந்தேற இந்த்ர ...... புரிவாழ

மதவித கஜரத துரகத பததியின்
     வன்சேனை மங்க ...... முதுமீன

திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
     திண்டாட வென்ற ...... கதிர்வேலா

ஜெகதல மிடிகெட விளைவன வயலணி
     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் ... எல்லை கடந்து உருகும்படி செய்யும் கயல் மீன் போன்ற கண்களை உடையவரும்,

கண்டு ஆன செம் சொல் மடமாதர் ... கற்கண்டு போன்ற இனிய பேச்சுக்களை உடையவரும் ஆகிய விலைமாதர்களின்

கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் ... இணைப்பிலே மூழ்கிய வழியில் அறிவு கலங்கி மயங்குகின்ற, வினைக்கு ஈடான, நானும்,

உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உன் பாத கஞ்ச மலர் மீதே ... என் சொற்களையும், அறிவையும், உயிரையும், உணர்வையும் உனது திருவடித் தாமரையின் மேல்

உரவொடு புனை தர நினைதரும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ ... உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டி, உன்னை எப்போதும் நினைக்கின்ற அடியார்களுடன் ஒன்றாகும்படியான பாக்கியத்தை என்று பெறுவேனோ?

வரை இரு துணி பட வளை படு சுரர் குடி வந்து ஏற இந்த்ர புரி வாழ ... கிரெளஞ்ச மலை இரண்டு கூறுபடவும், சிறையில் அடைபட்டிருந்த தேவர்கள் தங்கள் ஊரில் குடியேறவும், தேவேந்திரனது பொன்னுலகம் வாழவும்,

மத வித கஜ ரத துரக பத(தா)யின் வன் சேனை மங்க ... மதம் கொண்ட யானை, தேர், குதிரை, காலாட்படை இவைகளைக் கொண்ட வலிமை வாய்ந்த அசுரர் சேனை அழிந்துபடவும்,

முது மீன திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர்வேலா ... முதிய மீன்கள் உள்ள அலைகள் நிறைந்த கடல் அலறி முறையிடவும், அசுரர்கள் திண்டாட்டம் கொள்ளவும் வெற்றி கொண்ட வேலை உடையவனே,

ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... பூதலத்தின் வறுமை கெடும்படியான விளைச்சல்கள் உடைய வயல்கள் சூழ்ந்த திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே.




* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.
மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.





Song 588 - karai aRa urugudhal (thiruchchengkOdu)

karaiyaRa vurukuthal tharukayal vizhiyinar
     kaNdAna senjol ...... madamAthar

kalaviyil muzhukiya neRiyini laRivuka
     langAma yangum ...... vinaiyEnum

uraiyaiyu maRivaiyum uyiraiyu muNarvaiyum
     unpAtha kanja ...... malarmeethE

uravodu punaithara ninaitharu madiyaro
     donRAka enRu ...... peRuvEnO

varaiyiru thuNipada vaLaipadu surarkudi
     vanthERa inthra ...... purivAzha

mathavitha gajaratha thurakatha pathathiyin
     vansEnai manga ...... muthumeena

thiraimali salanithi muRaiyida nisisarar
     thiNdAda venRa ...... kathirvElA

jekathala midikeda viLaivana vayalaNi
     sengOda marntha ...... perumALE.

......... Meaning .........

karai aRa urukuthal tharu kayal vizhiyinar: Their eyes are like kayal fish which make one melt beyond limit;

kaNdu Ana sem sol madamAthar: and their speech is sweet like sugar-candy; with such whores,

kalaviyil muzhukiya neRiyinil aRivu kalangA mayangum vinaiyEnum: I have been immersed in carnal pleasure, in a state of a muddled mind, totally under delusion, due to the havoc played on me by past deeds;

uraiyaiyum aRivaiyum uyiraiyum uNarvaiyum un pAtha kanja malar meethE uravodu punai thara ninaitharum adiyarodu onRAka enRu peRuvEnO: to enable me to resolutely dedicate my words, intellect, life and feelings at Your hallowed lotus feet, when shall I be fortunate to mingle with Your devotees who always think of You?

varai iru thuNi pada vaLai padu surar kudi vanthu ERa inthra puri vAzha: In order that the mount Krouncha is split into two, the imprisoned DEvAs are resettled in their land, the celestial land of IndrA prospers,

matha vitha kaja ratha thuraka patha(a)thiyin van sEnai manga: the mighty armies of the demons consisting of wild elephants, chariots, horses and soldiers are destroyed,

muthu meena thirai mali sala nithi muRai ida nisisarar thiNdAda venRa kathirvElA: the wavy sea full of old fish screams pleadingly and the demons run away helter skelter, You wielded the triumphant spear, Oh Lord!

jekathala midi keda viLaivana vayal aNi sengOdu amarntha perumALE.: The paddy fields surrounding this place ThiruchchengkOdu* yield an abundant crop to alleviate the poverty of the world, and it is Your abode, Oh Great One!





* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given.

In Kandhar AlangkAram, Saint AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes!


  (0507-0000-2442_xcz)*fxm

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions