Sri AruNagirinAthar
Kaumaram Logo

the website for
Lord Murugan's devotees

ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh


Kaumara_chellam   

ஸ்ரீ அருணகிரிநாதரின்
திருப்புகழ் - பாடல் 402
இருவினை ஊண்
(திருவருணை)

song 402
iruvinai UN
(thiruvaNNAmalai)


Sri Gopala Sundaram
Sri Gopala Sundaram


தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்

Meanings in
Tamil and English by
Sri Gopala Sundaram



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next

 ஒலிப்பதிவுக்கு 
mp3


view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க

 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 


தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
     தனதன தாந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
     யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி

இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
     மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக்

குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
     டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென்

றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
     னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ

அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
     ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும்

அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
     அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே

கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
     கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங்

கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
     கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இருவினை ஊண் பசும் பை ... இரண்டு வினைகளுக்கும் உணவிடமான புத்தம் புது தோல் பை,

கரு விளை கூன் குடம்பை ... கரு வளருவதற்கு இடமான பாத்திரம் ஆகிய உடம்பு,

இடர் அடை பாழ் பொதும்பு ... துன்பங்களையே அடைத்து வைத்துள்ள, பாழடையப் போவதான குகை,

அகித வாரி இடை திரி சோங்கு ... துன்பமும் தீமையும் கொண்ட கடலின் நடுவில் திரிகின்ற மரக்கலம்,

கந்தம் மது அது தேங்கு கும்பம் ... மலச்சேறும் மூத்திர நீரும் நிரம்பிய இடம்,

இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு உருவு இயல் பாண்டம் ... இரவிலே தூங்குகின்ற பிணம் போன்ற, நோயினுக்கு உருவாய் அமைந்த பாத்திரம்,

அஞ்சும் மருவிய கூண்டு ... ஐம்பூதங்களும் பொருந்தி உள்ள கூடு,

நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை ... என் மனத்துடன் உயிரும் (உடலை விட்டு) வெளியேறும் சிறு குடில் - ஆகிய இந்த உடம்பு

அழியாது என்று ... அழியாமல் நிலைத்து நிற்கும் என்று,

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து ... உலகத்தாரிடம் நான் கொண்டுள்ள, வினைப் பயனால் வரும், மயக்கம் நீங்கப் பெற்று,

உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ ... உனது இரண்டு தாமரைத் திருவடிகளை அடையும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

அருணையில் ஓங்கு துங்க சிகரம் ... திரு அண்ணாமலையில் உயர்ந்து ஓங்கிய பரிசுத்தமான கோபுர வாயிலில்,

கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் அடியவர் பாங்க ... தாமரை போன்ற கைகளைக் கூப்பி தேவர்கள் தொழ வாழ்கின்ற அடியார்களின் தோழனே,

பண்டு புகல் அகிலாண்டம் உண்ட ... முன் ஒரு காலத்தில் சொல்லப்படுகின்ற எல்லா உலகங்களையும் உண்ட,

அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே ... புதுமை வாய்ந்த சாரங்கம் என்னும் வில்லை ஏந்திய வீரனாகிய திருமாலின் மருகோனே,

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் ... கருணை நிறைந்த புலிக்கால் கொண்ட வியாக்ரபாதருடன்,

உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த ... சர்ப்ப சிரேஷ்டரான பதஞ்சலி முநிவரும் தரிசித்த நடராஜரின்* மகனே,

வரை சாடும் கலபக கேந்த்ர தந்த்ர அரச ... மலைகளைத் தூளாக்கும் தோகை உடைய மயில் வாகனனே, இலக்கிய நூல்களில் வல்லவனே, அரசனே,

நிசேந்த்ர கந்த ... சத்திய சிரேஷ்டனாகிய கந்தனே,

குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே. ... வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவேந்திரர்களுக்குப் பெருமாளே.




* தில்லையில் நடராஜப் பெருமானது ஆடல் வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற இருவர் காணும் பொருட்டே ஆடப்பட்டது.





Song 402 - iruvinai UN (thiruvaNNAmalai)

iruvinai yUNpa sumpai karuviLai kUnku dampai
     yidaradai pAzhmpo thumpa ...... kithavAri

idaithiri sOngu kantha mathuvathu thEngu kumpa
     miravidai thUngu kinRa ...... piNanOvuk

kuruviyal pANda manju maruviya kUNdu nenjo
     duyirkudi pOnku rampai ...... yazhiyAthen

Rulakuda nEnRu koNda karumapi rAntho zhinthu
     nupayapa thAmpu yanga ...... LadaivEnO

aruNaiyi lOngu thunga sikaraka rAmpu yanga
     Lamarar kuzhAnku vinthu ...... thozhavAzhum

adiyavar pAnga paNdu pukalaki lANda muNda
     abinava sArnga kaNdan ...... marukOnE

karuNaimru kEnthra anpa rudanura kEnthrar kaNda
     kadavuLna tEnthrar maintha ...... varaisAdum

kalapaka kEnthra thanthra arasani sEnthra kantha
     karakuli sEnthrar thangaL ...... perumALE.

......... Meaning .........

iruvinai UN pasum pai: It is just a green bag of skin in which the good and bad deeds are ingested;

karu viLai kUn kudampai: It is but a vessel in which birth takes place;

idar adai pAzh pothumpu: It is a cavern, to be doomed soon, filled up with miseries;

akitha vAri idai thiri sOngu: It is a rudderless ship tottering in the mid-sea of distress and evil;

kantham mathu athu thEngu kumpam: It is a septic tank filled with faeces and urine;

iravu idai thUngukinRa piNa nOvukku uruvu iyal pANdam: It is but a sleeping corpse in the night and a receptacle for all diseases;

anjum maruviya kUNdu: It is a cage in which all the five elements are filled;

nenjodu uyir kudi pOm kurampai: It is this body, a small cottage, from which my mind and life will depart simultaneously.

azhiyAthu enRu: Thinking that this body is indestructible,

ulakudan EnRu koNda karuma pirAnthi ozhinthu: I develop attachment with people of this world, due to delusion, being the result of my past deeds; getting rid of that delusion,

un upaya pathAm puyangaL adaivEnO: will I ever be able to attain Your two hallowed lotus feet?

aruNaiyil Ongu thunga sikaram: In front of the imposing and impeccable Temple Tower of ThiruvaNNAmalai,

karAm puyangaL amarar kuzhAm kuvinthu thozha vAzhum adiyavar pAnga: Your devotees are being paid obeisance to by the celestials with their lotus hands folded; You are the friend of those devotees!

paNdu pukal akilANdam uNda: Once, the entire world was swallowed by

abinava sArnga kaNdan marukOnE: Lord Vishnu, who holds in His hand the unique bow, SArangam; You are His nephew!

karuNai mrukEnthra anparudan: Along with the compassionate sage, VyAkrapAdhar, the tiger-footed one,

urakEnthrar kaNda kadavuL natEnthrar maintha: the Great Serpent King, Sage Pathanjali, witnessed the Cosmic Dance of Lord NadarAjar*; You are the son of that NadarAjar.

varai sAdum kalapaka: The thick feathers of Your Peacock are capable of smashing the mountains to pieces!

kEnthra thanthra arasa: You are well-versed in literature, Oh King!

nisEnthra kantha: You are the greatest preserver of Truth, Oh Kantha!

kulisa kara inthrar thangaL perumALE.: You are the Lord worshipped by all IndrAs who wield the weapon Vajra, Oh Great One!





* In Chidhambaram, Lord NadarAjar danced the Cosmic Dance at the request of VyakrapAdhar and Sage Pathanjali.


  (0340-0000-3238_000CA)*fam


இப்பாடலின் ஒலிப்பதிவு(கள்)  audio recording(s) of this song

guruji ragavan

view in 'TSCII' font format      'டஸ்க்கீ' எழுத்துரு அமைப்பில் பார்க்க
 search Kaumaram Website      கௌமாரம் இணையத்தில் தேடல் 



templetemple


previous
 'மதாணி' எண் வரிசைக்கு  அகரவரிசைக்கு 


next


azhagi

 download Azhagi software and Free Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 




Top Home_t Home Contents
view guestbook sign guestbook mailing list
 send us your suggestions